பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதால் சின்னம் எங்களுக்குத்தான்.. இது "சின்னம்மா" தரப்பு வாதம்
டெல்லி: 1912 பொதுக்குழு உறுப்பினர்கள் சசிகலாவுக்கு ஆதரவு அளிப்பதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதம் முன்வைத்தார்.
சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய, இரு அணியினரும் தங்கள் தரப்பு ஆவணங்கள் மற்றும் கருத்தை நேரில் இன்று தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இருதரப்பினரும் இன்று காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஆரம்பித்தனர்.

முதலில் ஓ.பி.எஸ் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, அதிமுக உறுப்பினர்கள் அதிகம் பேரின் ஆதரவு ஓ.பி.எஸ் அணிக்கு இருப்பதாக வாதம் முன்வைக்கப்பட்டது.
இதன்பிறகு சசிகலா தரப்பில் வாதிட்ட அரிமா சுந்தரம், 1912 பொதுக்குழு உறுப்பினர்கள் சசிகலாவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். அதேபோல, வெறும் 65 பொதுக்குழு உறுப்பினர்கள்தான் ஓபிஎஸ்-க்கு ஆதரவு அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், அதிமுகவில் பிளவு என்பதே இல்லை என்று ஒரே போடாக போட்டார், வக்கீல் அரிமா சுந்தரம்.
சசிகலா அதிமுகப் பொதுசெயலராக சட்டப்படி தடை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தொண்டர்களை முன்வைத்து ஓ.பன்னீர்செல்வம் அணியும், பொதுக்குழு உறுப்பினர்களை முன்வைத்து சசிகலா அணியும் வாதிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications