For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு பங்கு உண்டு: ஆச்சார்யா பரபரப்பு பேச்சு

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கும் பங்கு உண்டு என மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கும பங்குள்ளதாக மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்துள்ளார். ஜெயலலிதா இறந்த போதிலும் மற்ற மூவர் மீதான குற்றச்சாட்டுக்கு தீர்ப்பு தரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்துள்ள நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் இன்று அறிவித்தது.

Sasikala has share in the Jayalalitha's assets case: senior lawyer Aacharya

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு பங்கு உண்டு என்று கூறியுள்ளார். ஜெயலலிதா இறந்தபோதிலும் மற்ற மூவர் மீதான குற்றச்சாட்டுக்கு தீர்ப்பு தரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்க உள்ளது. சசிகலா முதல்வராக பதவியேற்கவுள்ள நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வரவிருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை கூட்டியுள்ளது.

English summary
A senior lawyer Acharya said that Sasikala has share in the Jayalalitha's assets case. Although Jayalalitha is no more the other three will get the verdict in the case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X