15 நாட்கள் கேட்ட சசிகலாவுக்கு 5 நாள் பரோல் கொடுத்தது கர்நாடக சிறை!
கணவர் நடராஜனை பார்க்க சசிகலாவுக்கு கர்நாடக சிறை 5 நாட்கள் பரோல் வழங்கியுள்ளது.
Recommended Video

பெங்களூரு: பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு கர்நாடக சிறை 5 நாட்கள் பரோல் வழங்கியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டணை பெற்றுள்ள சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது கணவர் நடராஜன் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனை காரணம் காட்டி பெங்களூரு சிறையில் சசிகலா 15 நாட்கள் பரோல் கேட்டு விண்ணப்பித்தார்.

பரோல் கோரி புதிய மனு
போதுமான ஆவணங்கள் இல்லை எனக்கூறி சிறை நிர்வாகம் கடந்த செவ்வாய்க்கிழமை அவரது பரோல் கோரிக்கையை நிராகரித்தது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் கூடுதல் ஆவணங்களை சேர்த்து சசிகலா புதிய மனு தாக்கல் செய்தார்.

பரோல் கிடைத்ததாக தகவல்
இந்நிலையில் நேற்று மாலை டிடிவி தினகரன் பெங்களூரு புறப்பட்டு சென்றார். இதைத்தொடர்ந்து இரவு 10 மணியளவில் சசிகலாவுக்கு கடுமையான நிபந்தனைகளுடன் பரோல் கிடைத்துவிட்டதாக தகவல் வெளியானது.

வால்மிகி ஜெயந்தி விடுமுறை
ஆனால் கர்நாடக மாநில அதிமுக செயலாளரான புகழேந்தி இதனை மறுத்தார். நேற்று வால்மிகி ஜெயந்தி விடுமுறை என்பதால் இன்றுதான் அவருக்கு பரோல் கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.

பரோல் கிடைத்தது
இதையடுத்து சசிகலாவுக்கு இன்று பரோல் வழங்கப்பட்டது. 15 நாட்கள் பரோல் கேட்ட சசிகலாவுக்கு கர்நாடக சிறைத்துறை 5 நாட்கள் வழங்கியுள்ளது.

10ஆம் தேதி மீண்டும் சிறைக்கு
சசிகலா வரும் 10ஆம் தேதி மீண்டும் வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இன்று சென்னை வரும் சசிகலா கணவர் நடராஜனை மருத்துவமனையில் சந்திப்பார் எனத் தெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications