சசிகலாவுக்கு டாக்டர் பட்டமா? ராம மோகன் ராவ் கியூவில் நின்றாரா? சிதம்பரம் பொளேர்
சசிகலாவைப் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் சந்தித்தது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லி: சசிகலாவைப் போய்ப் பார்த்த பல்கலைக் கழக துணைவேந்தர்கள் அவருக்கு கவுர டாக்டர் பட்டம் வழங்கவார்களோ? என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த அதிமுக பொதுச்செயலர் பதவி யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. பொதுச்செயலராக சசிகலா தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக பொதுக்குழு வரும் 29 ஆம் தேதி கூடுகிறது. அந்த கூட்டத்தில் சசிகலா பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்க அதிகம் வாய்ப்பு இருப்பதாகவும் அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே தொழிலதிபர்கள், ஊடகவியலாளர்கள், பல்கலைக் கழக துணை வேந்தர்கள் என பலரும் சசிகலாவை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் சசிகலாவைப் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் சந்தித்தது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில், சசிகலாவைப் போய்ப் பார்த்த பல்கலைக் கழக துணைவேந்தர்கள் அவருக்கு கவுர டாக்டர் பட்டம் வழங்கவார்களோ? என பதிவிட்டுள்ளார்.
(1/2) Vice Chancellors call on Ms Sasikala. Will they next confer honorary doctorate upon her?
— P. Chidambaram (@PChidambaram_IN) December 22, 2016
மற்றொரு டுவிட்டரில், முன்னாள் தலைமை செயலாளர் வீட்டில் ஏராளமான புதிய ரூபாய் நோட்டுகள் கைப்பற்றபட்டுள்ளது. ஆனால் அவர் புதிய ரூபாய் நோட்டுகளை மாற்ற எவ்வளவு நேரம் வரிசையில் நின்றார் என பதிவிட்டுள்ளார்.
(2/2) Hoard of new currency found with TN Chief Secretary. How many hours did he stand in queues?
— P. Chidambaram (@PChidambaram_IN) December 22, 2016












Click it and Unblock the Notifications