கூடுதல் போலீஸ் பாதுகாப்பு கோரி எம்.பி.சசிகலா புஷ்பா டெல்லி ஹைகோர்டில் வழக்கு
டெல்லி: தனது உயிருக்கும், வீட்டிற்கும் அச்சுறுத்தல் இருப்பதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி எம்.பி.சசிகலா புஷ்பா டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.
டெல்லி விமான நிலையத்தில் திமுக., எம்.பி. திருச்சி சிவாவை, அதிமுக., எம்.பி. சசிகலா புஷ்பா தாக்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பிறகு மாநிலங்களவையில் பேசிய சசிகலா புஷ்பா, "எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. எனது பதவியை ராஜினாமா செய்யும்படி எனது கட்சித் தலைமையால் நிர்பந்திக்கப்பட்டுள்ளேன். என்னை எனது தலைவர் அறைந்தார்" என பேசியது அரசியல் வட்டாரத்தில் இன்னும் பரபரப்பை கூட்டியது.

இதைத் தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த விவகாரம், தமிழக அரசியலில் மட்டுமல்லாமல் இந்திய அரசியலிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில். டெல்லியில் உள்ள தனது வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு கேட்டு எம்.பி.சசிகலா புஷ்பா டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.
தனது உயிருக்கும், வீட்டிற்கும் அச்சுறுத்தல் இருப்பதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்க டெல்லி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். அவர் மனு மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரும் என தகவல் தெரியவந்துள்ளது.
-
விஜய் கூட டெல்லி போனவங்க யார்? அவங்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்? தராசு ஷ்யாம் டென்ஷன் -
இஸ்லாமிய மன்னர்களே பசுக்களை வெட்டியது இல்லை.. தீர்ப்பில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் சொன்னது என்ன? -
தெரிந்தே இப்படி செய்யலாமா? அருண் ஐபிஎஸ்ஸை கண்டித்த ஹைகோர்ட்! தொழிலதிபர் மீதான குண்டர் சட்டம் ரத்து -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
பசு, மாடு, ஆடுகளை வெட்ட தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையில் சொல்வது என்ன? விளக்கம் -
நாளை பக்ரீத்.. தமிழகத்தில் பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை.. ஐகோர்ட் போட்ட முக்கிய உத்தரவு! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி!












Click it and Unblock the Notifications