பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார் சசிகலா! சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு
10 வாகனங்கள் புடை சூழ சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் சென்று சேர்ந்தார். இதையடுத்து கோர்ட்டில் சசிகலா சரணடைந்தார். அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னை: அதிமுக பொதுச்செயலர் சசிகலா அவரது அண்ணி இளவரசி இருவரும் ஒரே காரில் பரப்பன அக்ரஹாரா சென்று சேர்ந்தனர். அவர்களை சிறைக்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவுக்கு சரணடைய கால அவகாசம் தர முடியாது என்று சுப்ரீம் கோர்ட் இன்று கூறிவிட்ட நிலையில், சசிகலா போயஸ் இல்லத்திலிருந்து பெங்களூர் நீதிமன்றம் நோக்கி இன்று காலை 11.45 மணியளவில் காரில் புறப்பட்டார்.

சசிகலாவும், இளவரசியும் ஒரே காரில் பயணித்தனர். முன்னதாக சசிகலா போயஸ் இல்லத்தில் வைத்து ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பிறகு மெரினாவிலுள்ள ஜெயலலிதா நினைவிடம் சென்று அங்கும் அஞ்சலி செலுத்தினார். பிறகு ராமாவரத்தில் எம்.ஜிஆர். இல்லத்தில் சசிகலா அஞ்சலி செலுத்தினார்.
மாலை 4.45 மணியளவில் சசிகலா, இளவரசி ஆகியோர் பயணித்த கார் ஒசூரை தொட்டது. 5 மணியளவில் கர்நாடக எல்லைக்குள் கார் நுழைந்தது. மாலை 5.15 மணியளவில் கார் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை பகுதிக்கு வந்து சேர்ந்தது. 10 கார்கள் இவர்களது கார்களைப் பின் தொடர்ந்து வந்தன.
கோர்ட்டில் நீதிபதி அஸ்வத் நாராயணன் முன்னிலையில், சசிகலா சரணடைந்தார். ஆவணங்களை பரிசீலனை செய்துவிட்டு, அவரையும், இளவரசியையும் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இருவருக்கும் சிறையில் உடல் பரிசோதனை செய்யப்படுகிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காகவே இன்று இங்கு சிறப்பு நீதிமன்றம் செயல்பட்டது. மதியம் 3 மணிக்கே நீதிபதி அஸ்வத் நாராயண் கோர்ட்டுக்கு வந்து சேர்ந்தார். அவர் சசிகலா மற்றும் இளவரசியை சிறையில் அடைக்க தேவையான ஆவணங்களை பார்வையிட்டு வந்தார். மாலை 5 மணியளவில் சசிகலா கணவர் நடராஜன் பரப்பன அக்ரஹாரா பகுதிக்கு வந்தார். ஃபார்ச்சூனர் காரில் அவருடன் நான்கு ஆதரவாளர்களும் வந்திருந்தனர். அதிமுக எம்.பி தம்பிதுரையும் வருகை தந்தார்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications