சி.எம் வராமாட்டராமா? தினகரனிடம் கோபப்பட்ட சசிகலா
பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை பார்க்கப் போன தினகரனிடம் என்னைப்பார்க்க முதல்வர் வரமாட்டாரா?என்று சசிகலா கோபமாக கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை அவரது அக்காள் மகன் டிடிவி தினகரன் நேற்று போய் சந்தித்துள்ளார். அப்போது அவரிடம், என்னைப் பார்க்க சியெம் வரமாட்டரா என்று கோபத்தோடு கேட்டாராம்.
சசிகலாவின் ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிச்சாமிதான் இப்போது முதல்வராக இருக்கிறார். பதவியேற்ற உடனேயே பெங்களூரு சிறைக்கு சென்று சசிகலாவை சந்திப்பார் பழனிச்சாமி என்று கூறப்பட்டது.
இது அதிருப்தியை ஏற்படுத்தும் என்றும் என நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பின்னர் செல்லலாம் என்று சிலர் கூறவே எடப்பாடி பழனிச்சாமி அமைதியாக தலைமைச் செயலகம் சென்று விட்டார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்ததை டிவியில் பார்த்து ரசித்த சசிகலா, தன்னை பார்க்க வந்த வழக்கறிஞர்களிடம் பாராட்டினாராம். சிறையில் இருந்தே தொலைபேசி மூலம் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்களுக்கு வாழ்த்துக்களை கூறினார்களாம்.

எடப்பாடி பழனிச்சாமி
முதல்வராக முறைப்படி பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி நேற்று 5 முக்கிய பைல்களில் கையெழுத்து போட்டு பணியை தொடங்கிவிட்டார். ஆனால் சசிகலாவை சந்திக்க சிறைக்கு இன்னும் போகவில்லை. காரணம் முதல்வராக இருந்து கொண்டு சிறையில் இருக்கும் குற்றவாளியை சந்திக்கப் போகக்கூடாது என்ற புரோட்டக்கால்தானாம்.

டிடிவி தினகரன் சந்திப்பு
சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி தினகரனும், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கும் நேற்று சசிகலாவை பார்த்து பேசினார்கள். அப்போது பேச்சு எல்லாம் தமிழக சிறைக்கு மாற்றுவது தொடர்பாகவே இருந்ததாம். அப்போது தினகரன், கொஞ்ச நாள் பொருத்துக்கொள்ளுங்கள். எப்படியாவது தமிழகத்திற்கு மாற்றி விடுகிறோம் என்று கூறினாராம்.

வசதி செய்யுங்க
கர்நாடக அரசை சம்மதிக்க வைக்க காங்கிரஸ் அகில இந்திய தலைமையோடு பேசி வருகிறோம் என்று தினகரன் சொல்லியிருக்கிறார். சில வசதிகளை ஏற்பாடு செய்து தர ஆக்சன் எடுக்குமாறு கேட்டுக்கொண்டாராம் சசிகலா. இதனையடுத்தே அவர் கேட்ட ஃபேன், டேபிள் சேர், கட்டில், டிவி வசதிகளை ஏற்பாடு செய்தார்களாம்.

சிஎம் வரமாட்டாரா?
என்னைப் பார்க்க சி.எம்.வரமாட்டாரோ? என கோபமாக கேட்டிருக்கிறார் சசிகலா. முதல்வராக இருப்பதால் சில ப்ரோட்டகால் இடிக்கிறது , அதனால் தான் உடனடியாக அவர் வரவில்லை. நிச்சயம் வருவார் என சொல்லிவிட்டு வந்தாராம் தினகரன். முதல்வர் போகாவிட்டால் என்ன முக்கியமான சில அமைச்சர்கள் இன்று போய் சசிகலாவை சந்தித்து விட்டு வந்திருக்கிறார்களே அது போதாதா?
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications