ரூ. 7 லட்சம் கோடி.. தென்இந்தியாவை குறிவைக்கும் சவுதி அரேபியா.. மொத்தமாக குவியும் முதலீடுகள்!
டெல்லி: இந்தியாவில் 7 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய சவுதி அரேபியா அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த சில மாதங்களாக இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையிலான நட்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திய பிறகு இந்த உறவு வலுவாகி உள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இதனால் இந்தியா கச்சா எண்ணெய் வாங்க அதிகமாக சவுதியை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது.

என்ன முதலீடு
இந்த நிலையில் இந்தியாவில் 100 பில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 7 லட்சம் கோடியை முதலீடு செய்ய சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு இன்றுதான் வெளியானது. இந்தியாவில் பல்வேறு தொழில் தொடங்குவது உட்பட நிறைய துறைகளில் இந்த முதலீடு செய்யப்பட உள்ளது.

எங்கு எல்லாம்
முக்கியமாக எரிசக்தி துறையில் அதிகமாக முதலீடு செய்யப்பட உள்ளது. அதேபோல் வாகனங்கள் , கார்கள் சார்ந்து ஆட்டோமொபைல் துறையிலும் அதிகமாக முதலீடு செய்யப்பட உள்ளது. சுரங்கம், விவசாயம், உள்கட்டமைப்பு, சுரங்க பணிகள் ஆகிய துறையிலும் முதலீடு செய்யப்பட உள்ளது.

மொத்தம் எத்தனை
மொத்தம் 40 துறைகளில் இதுபோல முதலீடு செய்யப்படும் என்று கூறப்பட்டு உள்ளது. கடந்த வருடம் 34 பில்லியன் டாலருக்கு சவுதி - இந்தியா இடையே ஒப்பந்தம் நடந்தது. தற்போது 100 பில்லியன் டாலராக இது உயர்த்தப்பட்டுள்ளது. முக்கியமாக தென் மாநிலங்களில் இந்த முதலீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எங்கு எல்லாம்
ஆம் தென் மாநிலங்களில் ஆட்டோமொபைல் துறையில் முதலீடு அதிகம் இருக்கும் என்கிறார்கள். ஏற்கனவே சவுதியின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான அராம்கோ உடன் ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. தற்போது சவுதியின் மற்ற நிறுவனங்களும் இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளது
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications