பட்டாசுகளால் ஏற்படும் தீமைகளை மக்களுக்குச் சொல்லுங்கள்...மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் அட்வைஸ்
டெல்லி: தீபாவளி பட்டாசுகளால் ஏற்படும் தீங்குகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும்படி மத்திய மற்றும் மாநில அரசுகளை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. தலைமை நீதிபதி ஹெச். எல்.தத்து, நீதிபதி அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தக் கருத்தை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் விரிவான விளம்பரங்களை வெளியிடுமாறும் அரசுகளை நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள், பட்டாசுகளால் ஏற்படும் தீமைகள் பற்றி மாணாக்கர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளுடன் கலந்தாலோசித்து, அவர்களது கருத்துகளை கேட்டறிந்து ஒரு வாரத்தில் நீதிமன்றத்தில் தெரிவிக்கும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முன்னதாக இரைச்சல் இல்லாத மாசற்ற சுற்றுச்சூழல் என்பது தங்களது உரிமை எனக்கூறி 14 முதல் 6 வயதுடைய மூன்று குழந்தைகள் சார்பில் அவர்களது பெற்றோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை டெல்லியில் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications