For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் தடை!

By Shankar
Google Oneindia Tamil News

டெல்லி: தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கக்கோரி விலங்குகள் நலவாரியத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மத்திய அரசு, தமிழக அரசு, ஜல்லிக்கட்டு பேரவை, மிருக நலவாரியம் ஆகியோர் தரப்பில் வாதங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன.

ஜல்லிக்கட்டு பாரம்பரிய் அவிளையாட்டு, இதில் காளைகள் துன்புறுத்தப்படவில்லை என்று தமிழகம் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், தமிழகத்தில் ஜல்லிக்கட்டுகளை நடத்த தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

துன்புறுத்தல் இல்லை

துன்புறுத்தல் இல்லை

தமிழக அரசின் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என்றும் இதில் காளைகள் துன்புறுத்தப்படுவது இல்லை என்றும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

மேலும் காளைகள் விளையாட்டு மெக்சிகோ, கனடா உள்ளிட்ட பல நாடுகளிலும் ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருகின்றன.

அக்கறை

அக்கறை

காளை சாதுவான மிருகம் கிடையாது. உலகம் முழுக்க பொழுதுபோக்குக்காக பயன்படுத்தப்படும் விலங்கு. சில நாடுகளில் காளை விளையாட்டுகள் முடிந்ததும் அதனை ஈட்டியால் குத்திக் கொன்று விடுகின்றனர். இங்கு இதுபோன்ற கொடுமைகள் நடப்பது இல்லை.

மாறாக, காளைகளின் மீது பெரிதும் அக்கறை காட்டப்படுகிறது. அரசு மற்றும் நீதிமன்றங்கள் வகுத்த விதிமுறைகள் அனைத்தும் முறைப்படி பின்பற்றப்படுகின்றன என்றும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

கண்காணிக்கலாம்

கண்காணிக்கலாம்

மத்திய அரசின் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்காணிக்கவும் காளைகளின் மீது ஏதாவது கொடுமைகள் நிகழ்த்தப்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்தவும் மிருகங்கள் நலவாரியத்தின் அதிகாரிகளை நியமிக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

எதிர்வாதம்

எதிர்வாதம்

மிருகங்கள் நலவாரியத்தின் சார்பாக ஜல்லிக்கட்டு போட்டிகளில் அனைத்து விதிமுறைகள், மத்திய அரசு கட்டுப்பாடு அனைத்தையும் கணக்கில் கொண்டாலும் இது சட்டவிரோதமானது. போட்டிகளில் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் கடைப்பிடிக்கப்படுவது இல்லை. இதுபோன்று கட்டுப்பாடுகள் தோல்வியடைந்ததால், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்றும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

தடை விதித்து தீர்ப்பு

தடை விதித்து தீர்ப்பு

இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றம், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பு தமிழகத்துக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.

English summary
The Supreme court will give the judgement on the case seeking ban on Jallikkattu in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X