வீரப்பன் கூட்டாளிகள் உட்பட 15 பேரின் தூக்கு தண்டனை ரத்துக்கு எதிரான மத்திய அரசு மனு தள்ளுபடி

வெவ்வேறு வழக்குகளில் சந்தன கடத்தல் வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் உட்பட மொத்தம் 15 பேருக்கு விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்திருந்தது. இப்படி தூக்கு தண்டனை விதிக்கப்பட்டோர் தங்களது தண்டனையை ரத்து செய்யக் கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினர்.
ஆனால் அந்த கருணை மனுக்கள் மீது முடிவு எடுப்பதற்கு பல ஆண்டுகள் தாமதம் ஆயின. பல ஆண்டுகால தாமதத்துக்குப் பின்னர் அவர்களின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இதை காரணம் காட்டி தங்களது தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி 15 பேரும் உச்ச நீதிமன்றத்தில் வெவ்வேறு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இம்மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரி 21ந் தேதி அதிரடியாக தீர்ப்பு வழங்கியது.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டோரின் கருணை மனுக்கள் மீது முடிவு எடுப்பதில் நீண்ட காலதாமதம் ஏற்பட்டுள்ளது.இதனால், தாங்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகி தினம் தினம் செத்து செத்து பிழைப்பதாக குறிப்பிட்டிருந்தனர். இந்த வாதத்தை ஏற்ற உச்ச நீதிமன்றம், நீண்ட காலதாமதம் ஏற்பட்டற்கு தகுந்த காரணத்தை மத்திய அரசு தெரிவிக்காததால், 15 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாககுறைத்து தீர்ப்பு வழங்கியது. நாடு முழுவதும் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் இந்த தீர்ப்பை வரவேற்றனர்.
ஆனால் மத்திய அரசோ உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், கருணை மனுக்களை பரிசீலிப்பதில் ஏற்படும் நீண்ட தாமதத்தை காரணம் காட்டி தூக்கு கைதிகளின் தண்டனையை ஆயுளாக குறைப்பது சட்ட விரோதமானது. இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கொடூர கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு, கருணை மனு மீது முடிவு எடுப்பதில் ஏற்பட்ட கால தாமதத்தை காரணமாக காட்டி ஆயுள் தண்டனையாக குறைக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
இம்மனு மீது தொடர்ந்து விசாரணை நடத்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச், மத்திய அரசின் மறுசீராய்வு மனுவை இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதனால் ராஜிவ் காந்தி வழக்கில் தூக்கு தண்டனை அனுபவித்த பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தூக்கை ரத்து செய்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்க்கும் மத்திய அரசின் மனுவும் தள்ளுபடியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications