நளினி உட்பட 4 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!!
டெல்லி: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உட்பட 4 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்தது.
ராஜிவ் வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்கை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக்கியது உச்சநீதிமன்றம். இதைத் தொடர்ந்து இந்த மூவர் உட்பட ராஜிவ் வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்தது. பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரது விடுதலைக்கு எதிராகத்தான் அம்மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்று மூவரையும் விடுதலை செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

அப்போது எஞ்சிய 4 பேர் விடுதலைக்கும் மத்திய அரசு சார்பில் தடை கோரப்பட்டது. அதற்கு தனியே மனுத்தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து நளினி உட்பட 4 பேரின் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு மனுத் தாக்கல் செய்தது. இம்மனுவை இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது.
இந்த விசாரணையின் முடிவில் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு இடைக்கால தடையை உச்சநீதிமன்றம் விதித்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications