சிகரெட், பீடி விற்பனையை முற்றிலும் தடை செய்யலாமா? மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி: நாடு முழுவதும், சிகரெட், பீடி விற்பனையை தடை செய்வது குறித்த முடிவை தெரிவிக்குமாறு, மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சிகரெட், பீடியை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கைவிடுத்து திரைப்பட துறையை சேர்ந்த சுனில்ராஜ்பால் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை, தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான, வக்கீல் ஆதித்ய அகர்வால் வாதிடுகையில், புகையிலை பொருட்கள் தொடர்பான வியாதிகளுக்கு சிகிச்சையளிக்க அரசு ஆண்டுக்கு சுமார் ரூ.30 ஆயிரம் கோடியை செலவிடுகிறது. எனவே சிகரெட் வரி மூலமாக அரசுக்கு அதிக நிதி கிடைப்பதாக காரணம் காட்டிக்கொண்டிருக்க முடியாது. ஆண்டுதோறும் உலக அளவில் புகையிலை பொருட்களால் 60 லட்சம் பேர் உயிரைவிடுகிறார்கள் என்று வாதிட்டார்.
இதைத்தொடர்ந்து, நாடு முழுவதிலும் சிகரெட், பீடி போன்ற புகையிலை பொருட்களை தடை செய்வது குறித்த மத்திய அரசின் கருத்தையும், மாநில, யூனியன் பிரதேச அரசுகளின் கருத்தையும் தெரிவிக்குமாறு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
பொது இடங்களில் புகைக்க கூடாது என்ற உத்தரவு ஆறு வருடங்கள் முன்பே பிறப்பிக்கப்பட்டபோதிலும், இதுவரை அந்த நடைமுறையை முழுமையாக தடுத்து நிறுத்த முடியவில்லை. கல்வி நிறுவனங்களின் 100 மீட்டர் சுற்றளவுக்குள் சிகரெட் பிடிக்க கூடாது, 18 வயதுக்குட்பட்டோருக்கு சிகரெட் விற்பனை செய்ய கூடாது என்ற உத்தரவுகளும் மீறப்படுகின்றன.
இந்நிலையில், சிகரெட் விற்பனையை ஒட்டுமொத்தமாக தடை செய்ய அரசுகளின் கருத்தை உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications