மேக்சிஸ் வழக்கு: தயாநிதி, கலாநிதி மனு சுப்ரீம்கோர்ட்டில் விசாரணைக்கு ஏற்பு! முந்தைய உத்தரவு வாபஸ்!
டெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தால் தங்களுக்குப் பிறப்பிக்கப்பட்ட சம்மனை எதிர்த்து முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சன் டி.வி. அதிபர் கலாநிதி மாறன் ஆகியோர் தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமையன்று விசாரணை நடைபெற உள்ளது. இந்த மனுவை விசாரிக்க முடியாது என்று முன்னர் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் திரும்பப் பெற்றுக் கொண்டது.

ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளரான சிவசங்கரனை கட்டாயப்படுத்தி அவரின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அனந்த கிருஷ்ணனுக்கு விற்கச் செய்ததாகவும், அதற்குப் பலனாக, மேக்சிஸ் நிறுவனத்திடமிருந்து வேறொரு நிறுவனம் வழியாக சன் டைரக்ட் டிவி நிறுவனத்துக்கு முதலீடு என்ற வகையில் ஆதாயம் அடைந்ததாகவும் தயாநிதி மாறன் மீது சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.
இவ்வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தயாநிதி, கலாநிதி உட்பட 6 பேரும் வரும் மார்ச் 2-ந் தேதி ஆஜராகும்படி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி கடந்த அக்டோபரில் சம்மன் அனுப்ப உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் தயாநிதி மற்றும் கலாநிதி மாறன் ஆகியோர் நேற்று முன் தினம் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில் "ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக மட்டுமே சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு ஸ்பெக்ட்ரம் முறைகேட்டுடன் தொடர்புடையதல்ல. எனவே, இந்த வழக்கில் தங்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளதால் சிறப்பு நீதிமன்றத்தின் அதிகார வரம்பு குறித்து கேள்வி எழுகிறது என்று தெரிவித்திருந்தனர்.
SC recalls its order asking Maran brothers to move Delhi HC against trial court order summoning them as accused in a case related to 2G scam
— Press Trust of India (@PTI_News) February 6, 2015 இம்மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் வி.கோபாலகவுடா, ஆர்.பானுமதி, ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அந்த குற்றப்பத்திரிகையும் திருப்திகரமாக உள்ளது.
அதன் அடிப்படையில்தான் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. எந்த முகாந்திரத்தில் சம்மனை எதிர்த்து மனுத்தாக்கல் செய்துள்ளீர்கள்? தற்போது சம்மனை எதிர்த்து ஏன் நேரடியாக உச்சநீதிமன்றத்துக்கு வரவேண்டும்? வேண்டுமானால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யுங்கள்.. இம்மனுவை விசாரிக்க முடியாது என்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Apex court recalls order after CBI informs there is an SC order that all cases arising out of 2G scam have to be heard by top court.
— Press Trust of India (@PTI_News) February 6, 2015 உத்தரவு திடீர் வாபஸ்
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போது சி.பி.ஐ. தரப்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகவில்லை. உத்தரவு வெளியான சில மணிநேரத்துக்குப் பின்னர் சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பான வழக்கு எதையும் எந்த உயர்நீதிமன்றத்திலும் நடத்தக் கூடாது.. அனைத்து ஸ்பெக்ட்ரம் தொடர்பான வழக்குகளுமே உச்சநீதிமன்றத்தால் விசாரிக்கப்பட வேண்டும் என்று ஏற்கெனவே உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதை சுட்டிக்காட்டினார்.
இதனை ஏற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கவுடா மற்றும் பானுமதி பெஞ்ச், தயாநிதி, கலாநிதி மாறன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க முடியாது என்ற தங்களது உத்தரவைத் திரும்பப் பெற்றனர். இம்மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில் திங்கள்கிழமையன்று நடைபெற உள்ளது.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம்












Click it and Unblock the Notifications