ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு: விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
டெல்லி: ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. லெக்ஸ் நிறுவன வழக்கு முடியும் வரை சொத்து குவிப்பு வழக்கிற்கு தடை விதிக்ககோரி ஜெயலலிதா தரப்பில் வைக்கப்பட்டிருந்த கோரிக்கையை நிராகரித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதே வழக்கில் லெக்ஸ் என்ற நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டு குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. அந்நிறுவனம் தங்கள் மீதான குற்றச்சாட்டை முதலில் விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்தது.

அந்நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பெங்களூரு நீதிமன்றம் முதலில் அதன் மீதான வழக்கு விசாரணை நடைபெறும் என்றும் அதே சமயத்தில் ஜெயலலிதா மீதான வழக்கின் விசாரணையும் தொடர்ந்து நடைபெறும் என கூறியது.
இதை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் லெக்ஸ் நிறுவனம் மீதான விசாரணை முடியும் வரை தன் மீதான விசாரணைக்கு தடை விதிக்குமாறு கோரியிருந்தார்.
இன்று இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜெயலலிதா கோரிக்கையை நிராகரித்து அவர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications