தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
தமிழக அரசு கொண்டு வந்துள்ள ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு எந்த தடையும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
டெல்லி: தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தையும் விசாரணைக்கு ஏற்று கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்டுள்ள மனுக்களுக்கு தமிழக அரசு 6 வாரங்களுக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி 8 நாட்களாக போராட்டம் நடைபெற்றது. மாணவர்களின் புரட்சியினால் தமிழக அரசு 3 நாட்களில் ஜல்லிக்கட்டு சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றியது.
தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றிய ஜல்லிக்கட்டு ஆதரவு சட்டத்திற்கு எதிராக கியூப்பா என்ற விலங்குகள் நல அமைப்பு மற்றும் விலங்குகள் நல வாரியம் ஆகியவை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு ஆதரவாக மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்தது. அதேபோல தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் சிலர் உச்சநீதிமன்றத்தை அணுகி, ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்ய மனு தாக்கல் செய்தனர். தமிழக அரசு, ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் கேவியட் மனுக்களை தாக்கல் செய்தனர்.
இதனையடுத்து அனைத்து மனுக்கள் மீதும் ஜனவரி 31ம் தேதி செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்த உள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது. ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் நேற்று ஒப்புதல் அளித்த நிலையில் இன்று மாலை வழக்கு விசாரணைக்கு வந்தது.

போராட்டம்
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டம் கடந்த 2014-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக இருப்பதாக அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள போது அதைப் பற்றி பேசவே கூடாது என்பது தான் சட்டம். ஆனால் அதனை மீறி தமிழகத்தில் எவ்வாறு போராட்டம் நடத்தப்பட்டது.

மத்திய அரசுக்கு அனுமதி
ஜல்லிக்கட்டுக்கு சட்டம் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்த சட்ட ரீதியான பதில்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கடந்த 2016ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய அரசு வெளியி்ட்ட அறிவிக்கையை திரும்ப பெற மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் விளக்கம்
தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டம் இன்னும் இரு நாட்களில் அரசிதழில் வெளியிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. ஜல்லிக்கட்டு சட்டம் கொண்டுவரப்பட்ட வழிமுறைகள் குறித்து அரசு வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளித்தனர்.

தடை விதிக்க மறுப்பு
ஜல்லிக்கட்டு சட்டத்தை ஏன் எதிர்க்கிறீர்கள் என்ற கேள்வியை விலங்குகள் நல வாரியத்திடம் நீதிமன்றம் எழுப்பியது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதன்மூலம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு எந்த தடையும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications