ஆளுநர் முடிவில் தலையீடு கூடாதா? ஜனநாயக படுகொலையை வேடிக்கை பார்க்க முடியாது: சுப்ரீம் கோர்ட் சுளீர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாட்டில் ஜனநாயக நடைமுறைகள் கொல்லப்படுவதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது என்று அருணாச்சல பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் மிகக் கடுமையாக கூறியுள்ளது.

அருணாசல பிரதேசத்தில் நாபம் துகி தலைமையிலான காங்கிரஸ் அரசு நடைபெற்று வந்தது. 21 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். இவர்களில் 14 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கையை ஏற்றும் அமைச்சரவையைக் கேட்காமலும் கடந்த டிசம்பர் 16-ந் தேதி சட்டசபையை கூட்ட ஆளுநர் ராஜ்கோவா உத்தரவிட்டார். ஆனால், முதல்வர் தரப்பு, சட்டசபையை பூட்டி விட்டதால், ஒரு சமுதாயக் கூடத்தில் சட்டசபை கூட்டம் நடந்தது.

SC Says Can't be Mute as Democracy is Slaughtered

இதில் முதல்வருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே அமைச்சரவை பரிந்துரை இல்லாமல், சட்டசபையை கூட்டிய ஆளுநரின் அதிகாரம் பற்றி கேள்வி எழுப்பி, அருணாசல பிரதேச சபாநாயகர் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி ஜே.எஸ்.கேகர் தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச், இம் மனுவை விசாரித்து வருகிறது.

இம்மனு மீது நேற்று மீண்டும் விசாரணைக்கு நடைபெற்றது. அப்போது ஆளுநருக்கு பா.ஜ.க. எம்எல்ஏவின் வழக்கறிஞர் ஆஜராகி, ஆளுநரின் அனைத்து முடிவுகளையும் நீதிமன்றம் ஆய்வுக்கு உட்படுத்திவிட இயலாது என்றார்.

இதில் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், ஜனநாயக நடைமுறைகள் கொல்லப்படும்போது, நீதிமன்றம் எப்படி வேடிக்கை பார்க்க முடியும்? எனக் கேட்டனர். அத்துடன் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து இப்போதுவரை, சட்டசபைக்கும், ஆளுநருக்கும் இடையிலான கடித தொடர்பு குறித்த விவரங்கள் அனைத்தையும் 8-ந்தேதி தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+