ஆர்.டி.ஐ.-ன் கீழ் அரசியல் கட்சிகள்..... மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
டெல்லி: தகவல் அறியும் உரிமை சட்ட வரம்பின் கீழ் அரசியல் கட்சிகளை கொண்டு வருவது தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசு, தேர்தல் ஆணையம் மற்றும் 6 தேசிய கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் பிராந்திய கட்சிகளின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மையும், பொறுப்பேற்றலும் வேண்டும்.

அரசியல் கட்சிகள் நன்கொடை, பங்களிப்பு என்ற பெயரில், பெரும் அளவு நிதி பெறுகின்றன. ஆனால் தங்களுக்கு கிடைக்கிற நிதிக்கு ஆதாரம் எதையும் அவை கூறுவதில்லை. தங்கள் வருவாய், செலவினம் குறித்து அனைத்து தேசிய, பிராந்திய கட்சிகள் கணக்கு தருவதை கட்டாயம் ஆக்க வேண்டும்.
ரூ.20 ஆயிரத்துக்கு குறைவான நன்கொடை என்றாலும் அதற்கும் கணக்கு காட்ட வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளையும் தகவல் அறியும் உரிமை சட்ட வரம்பின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து, நீதிபதிகள் அருண் குமார் மிஷ்ரா, அமித்தவா ராய் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், அரசியல் கட்சிகள், பொது அதிகார அமைப்புகள்தான். எனவே அவற்றை தகவல் அறியும் உரிமை சட்ட வரம்பின்கீழ் கொண்டு வரவேண்டும் என வாதிட்டார்.
இதையடுத்து இந்த வழக்கில் பதில் அளிப்பதற்கு மத்திய அரசு, தேர்தல் கமிஷன், பாரதிய ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட 6 தேசிய அரசியல் கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications