இத்தனை வருஷமா விசாரணையா... எப்போதுதான் முடியும் ராஜிவ் கொலை வழக்கு... சுப்ரீம்கோர்ட் சாட்டையடி
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கு விசாரணை எப்போதுதான் முடியும் என்று சிபிஐக்கு உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை தொடர்பாக பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் 4 வாரத்தில் பதிலளிக்க சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜிவ் காந்தி கொலை தொடர்பாக பல்நோக்கு கண்காணிப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவானது ராஜிவ் கொலை வழக்கின் சதி குறித்து விரிவாக விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பல்நோக்கு கண்காணிப்புக் குழு விசாரணை நடத்திக் கொண்டே இருக்கிறது. இதுவரை ராஜிவ் கொலையின் சதிகாரர்கள் குறித்து எந்த ஒரு தகவலையும் பல்நோக்கு கண்காணிப்புக் குழு வெளியிடவும் இல்லை.

பல்நோக்கு கண்காணிப்பு குழு
இதை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார். அதில், சிபிஐ அதிகாரிகளைக் கொண்ட பல்நோக்கு கண்காணிப்புக் குழு என்னதான் செய்கிறது? உண்மையான சதிகார்கள் யார்? என கேள்வி எழுப்பியிருந்தார். இந்த வழக்கு கடந்த டிசம்பர் மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது பேரறிவாளனின் கேள்விக்கு பதிலளிக்க சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

சரமாரி கேள்விகள்
இந்த நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ரஞ்சன் கோகாய் பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அமரேந்திர சரணிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.

என்னதான் நடவடிக்கை?
இத்தனை ஆண்டுகாலமாக ஒரு வழக்கில் விசாரணை நடைபெறுவதாகக் கூறுவதை ஏற்க முடியாது; விசாரிக்கப்படவேண்டிய வெளிநாட்டு நபர்களைக் கண்டுபிடிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று நீதிபதிகள் காட்டமாக கேள்வி எழுப்பினர்.

அதிரடி உத்தரவு
இதற்கு பதிலளித்த சிபிஐ வழக்கறிஞர், சதிகாரர்கள் வெளிநாட்டில் இருப்பதால் அவர்களை தேடி பிடிப்பதில் சிக்கல் உள்ளதாகக் கூறினார். இதனையடுத்து கால நிர்ணயம் இல்லாமல் விசாரணை நடத்தி வருவது அதிர்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்த நீதிபதிகள், இது சிபிஐயின் இயலாமையை வெளிப்படுத்துவதாகக் கூறி 4 வாரத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். அத்துடன் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 16-ந் தேதிக்கு ஒத்திவைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications