ராம்தேவ் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை.. 10 லட்சம் டெபாசிட் செய்ய உத்தரவு!
டெல்லி: தலித்களை இழிவுபடுத்தியதாக ராம்தேவ் மீது தொடரப்பட்ட வழக்குக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.
யோகா குரு என்று சொல்லிக் கொள்ளும் கார்ப்பொரேட் சாமியார் ராம்தேவ், பாஜகவுக்கு ஆதரவாள பிரச்சாரம் செய்தார் இந்த தேர்தலில். சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியின் போது, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, தலித் இனத்தவரின் வீடுகளுக்கு தேனிலவு செல்வதாக கூறியதாக சர்ச்சை எழுந்தது.

இதுதொடர்பாக லக்னோ தொடங்கி பரவலாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் ராம்தேவ் சார்பில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், தன் மீது வலுக்கட்டாயமான நடவடிக்கை எடுக்க தடை விதிக்கவும், நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை லக்னோவுக்கோ அல்லது நீதிமன்றம் விரும்புகிற இடத்திலோ ஒரே வழக்காக இணைக்கவும் உத்தரவிடுமாறு கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்து, இந்த விவகாரத்தில் ராம்தேவ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணைக்கு தடை விதித்தது. மேலும், அவருக்கு எதிராக புகார் செய்தவர்களின் பயணச்செலவு, ஆவணங்களை ஒரே இடத்தில் சேர்ப்பதற்கான செலவு போன்றவற்றுக்காக ராம்தேவ் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்யுமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வழக்கு பதிவாகி உள்ள மாநிலங்களுக்கு நோட்டீசு அனுப்பவும் உத்தரவிடப்பட்டது.
மொத்தம் 12 வழக்குகள் ராம்தேவ் மீது பதிவாகியுள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications