பான்கார்டுடன் ஆதார் எண் இணைப்பு - சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க அவசியம் இல்லை என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
டெல்லி: பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசியல் சாசன அமர்வு முடிவு செய்யும் வரை இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜூலை முதல் வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் எண் அவசியம் என மத்திய அரசு கூறியிருந்தது. இதற்காக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டது.

நிதி மசோதா திருத்தங்களின் படி வரி செலுத்துனர்கள் பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டது. பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்காவிட்டால், பான் கார்டுகள் காலக்கெடு முடிந்த பிறகு செல்லாது என்றும் மத்திய அரசு அறிவித்தது.
ஆதார் நம்பரை பான் கார்டுடன் இணைத்தால், ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டு வைத்துள்ளவர்களின் விவரங்கள் கிடைக்கும். இதன் மூலம் வருமான வரிச் செலுத்துவதில் ஏற்படும் முறைகேடுகளைக் குறைக்க முடியும் என மத்திய அரசு விளக்கம் அளித்தது.
இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு கட்டாயப்படுத்த கூடாது என கூறியுள்ளது.
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க அவசியம் இல்லை என கூறியுள்ள உச்சநீதிமன்றம், இந்த நடைமுறைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் தற்போதைக்கு வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் அட்டை அவசியம் இல்லையென்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
வருமான வரி சட்டம் 139 ஏ பிரிவை இதன் மூலம் மத்திய அரசு உறுதி செய்துள்ளது. மத்திய அரசின் மேற்கண்ட உத்தரவு தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானதா என்பது குறித்து அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தும் என கூறியுள்ளது. இந்த விசாரணை முடியும் வரை பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க இடைக்காலத் தடை விதிப்பதாக கூறியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications