2001-ல் 4 தொகுதிகளில் போட்டியிட ஜெ. மனு தாக்கல் செய்த வழக்கு: செப்.8-ல் இறுதி விசாரணை!!
டெல்லி: தேர்தல் விதிகளை மீறி 4 தொகுதிகளில் ஜெயலலிதா போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தில் வரும் செப்டம்பர் 8-ந் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2001ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி, புவனகிரி, ஆண்டிப்பட்டி, புதுக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிட ஜெயலலிதா வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

தேர்தல் விதிமுறைகளின் படி ஒருவர் இரு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட முடியாது. அதனால் 4 தொகுதிகளில் ஒரே நேரத்தில் போட்டியிட மனுத் தாக்கல் செய்த ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக முன்னாள் எம்.பி குப்புசாமி வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கின் இடையே குப்புசாமி திடீரென மரணமடைந்தார். அதனால் ஏ.கே.எஸ்.விஜயன் மனுதாரராக இருந்து வழக்கை நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் செப்டம்பர் 8-ந் தேதி நடைபெறும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான பெஞ்ச் அறிவித்துள்ளது.
இந்த வழக்கை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என விஜயன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அந்தி அர்ஜுனா வலியுறுத்தியுள்ளார். மேலும் நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக 2 முறை முதல்வர்பதவி மற்றும் எம்.எல்.ஏ. பதவிகளை இழந்தவர் ஜெயலலிதா; அவர் மீதான முந்தைய வழக்குகளைக் கருத்தில் கொண்டு தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications