மரண தண்டனை சட்டம் போட்டும் பலனில்லை.. ம.பி.யில் 15 வயது பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம்
போபால்: 15 வயது பள்ளி மாணவி இருவரால் பலாத்காரம் செய்யப்பட்டு பிறகு, உயிரோடு தீ வைத்து கொளுத்திய சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்திலுள்ளது தேவல் கிராமம். இப்பகுதியை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவிதான், பாதிப்புக்குள்ளாகியுள்ளார்.
அதே ஊரை சேர்ந்த ராகவேந்திரா சென் மற்றும் சுபம் யாதவ் ஆகிய இருவரும்தான், இந்த மா பாதக செயலை செய்துள்ளனர்.

கூட்டு பலாத்காரம்
மாணவி வீட்டில் தனியாக இருந்த நேரமாக பார்த்து வீட்டுக்குள் புகுந்த இருவரும், அவரை மாறி, மாறி பலாத்காரம் செய்துள்ளனர். இதன்பிறகு சம்பவம் குறித்து வெளியே சொல்லிவிடுவார் என அஞ்சிய குற்றவாளிகள் இருவரும், அந்த மாணவி மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து கொளுத்திவிட்டு தப்பியோடியுள்ளனர்.

தீ வைத்தனர்
மாணவியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீட்டிலுள்ளவர்கள் ஓடி வந்து நெருப்பை அணைத்து அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் 80 சதவீதம் அளவுக்கு அந்த சிறுமிக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வாக்குமூலம்
மாணவியின் வாக்குமூலம் அடிப்படையில் ஒரு குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். மற்றொருவன் தலைமறைவாகியுள்ளான்.

தூக்கு தண்டனை
சிறுமிகளை பலாத்காரம் செய்தால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் வகையில் சமீபத்தில்தான் மத்திய பிரதேசத்தில் சட்டம் கொண்டுவரப்பட்டது. குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக சட்டம் காத்திருக்கிறது. இந்த நிலையில் அந்த மாநிலத்தில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications