பேஸ்புக்கில் ஆபாச படம் வெளியானதால் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை: சக மாணவன் கைது

Subscribe to Oneindia Tamil

மும்பை: பேஸ்புக்கில் ஆபாச படம் வெளியானதால் மும்பையில் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆபாச படத்தை வெளியிட்டதாக அம்மாணவியின் சக வகுப்பு மாணவனைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

மும்பை நகர் மிரா சாலையை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி ஒருவரை, அவருடைய வகுப்பில் படிக்கும் மாணவர் ஒருவர் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் போலீசில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து அம்மாணவனை அழைத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.

Schoolgirl Jumps to Death Near Mumbai, Parents Blame Classmate

இதனால், மாணவி மீது அம்மாணவர் கோபத்தில் இருந்துள்ளார். மாணவியைப் பழி வாங்கும் விதமாக போலிப் பேஸ்புக் பக்கத்தைத் துவக்கிய மாணவர், அதில் அம்மாணவி குறித்து ஆபாசமான படங்களை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அறிய வந்த அம்மாணவி, அவமானம் தாங்காமல் தனது குடியிருப்பு கட்டிடத்தின் 7-வது மாடியில் இருந்து கீழே குதித்து கடந்த 20-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், மாணவியின் தற்கொலைக்கு காரணமாக இருந்த மாணவனை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் அந்த மாணவன் இளம் சிறார் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளான்.

அம்மாணவனின் செல்போன், கம்யூட்டர் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றி போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+