சசிதரூர் வேட்பு மனு பரிசீலனை ஒத்திவைப்பு
திருவனந்தபுரம்: சசிதரூரின் வேட்புமனு பரிசீலனையை தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்துள்ளது. நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தரூருக்கு உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் லோக்சபா தேர்தல் வருகிற 10-ந் தேதி நடக்கிறது. மாநிலத்திலேயே பெரிய தொகுதியான திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தற்போதைய எம்.பி.யும், மத்திய அமைச்சருமான சசிதரூர் போட்டியிடுகிறார்.
மனைவி சுனந்தாவின் மரணம் உள்பட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய சசிதரூருக்கு கடும் எதிர்ப்பை மீறி மீண்டும் போட்டியிடும் வாய்ப்பை காங்கிரஸ் மேலிடம் வழங்கியது. அவரும் தனது வேட்புமனுவை தாக்கல் செய்து விட்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.

திருவனந்தபுரம் தொகுதியில் கம்யூனிஸ்டு சார்பில் பெனட் ஆபிரகாமும், பா.ஜ.க சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜகோபாலும் போட்டியிடுகிறார்கள்.
இந்த நிலையில் திங்கட்கிழமை வேட்பு மனுக்கள் பரிசீலனை தொடங்கியது. அப்போது சசிதரூர் தனது வேட்புமனுவில் மனைவி சுனந்தாவின் சொத்து விபரத்தை குறிப்பிடவில்லை என்றும் எனவே அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் கோரினார்கள்.
இதுபற்றி தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான பிஜூபிரபாகரிடம் அவர்கள் புகார் மனு கொடுத்தனர். இதனால் சசிதரூரின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டது. சசிதரூர் நேரில் ஆஜராகி இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார்.
இதே போல கம்யூனிஸ்டு வேட்பாளர் பெனட்ஆபிரகாம் தன் மீது வழக்கு இருப்பது பற்றி குறிப்பிடாததால் அவரது வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது. மேலும் ஆற்றிங்கல் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிந்துகிருஷ்ணாவும் தன் மீது உள்ள வழக்குப்பற்றி குறிப்பிடாததற்கும் கம்யூனிஸ்டு கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து அந்த வேட்பாளர்களையும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications