நாடாளுமன்றம் மீண்டும் கூடியது! வழக்கம் போல எதிர்க்கட்சிகள் அமளி- ராஜ்யசபா ஒத்திவைப்பு!
நாடாளுமன்ற கூட்டத் தொடரின் 2-வது பகுதி இன்று தொடங்கியது, லோக்சபாவில் வழக்கம் போல எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு இன்று மீண்டும் தொடங்கியது. லோக்சபாவில் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினர். ராஜ்யசபாவில் இரங்கல் தீர்மானம் தெரிவிக்கப்பட்டு சபை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி கடந்த மாதம் 9-ந் தேதி முடிவடைந்தது. உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மாநில சட்டசபை தேர்தல்களால் கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப்பட்டது.

தற்போது தேர்தல்கள் முடிவடைந்துவிட்ட நிலையில் இன்று நாடாளுமன்ற கூட்டத் தொடரின் 2-வது பகுதி இன்று தொடங்கியது. தமிழக எம்.பி.க்கள் மீனவர் படுகொலை, நெடுவாசல் போராட்டம், நீட் விவகாரம் குறித்து இரு சபைகளிலும் எழுப்ப உள்ளனர்.
ராஜ்யசபாவில் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விவாதிக்க ஏற்கனவே ஓபிஎஸ் அணி எம்.பி.க்கள் ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்துள்ளனர். அதேபோல் தமிழக மீனவர் படுகொலை தொடர்பாக ராஜ்யசபாவில் சிறப்பு விவாதம் நடத்த திமுக எம்.பி கனிமொழி வலியுறுத்தி இருக்கிறார். அதிமுக எம்.பி.க்களும் மீனவர் பிரச்சனைக்காக தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் நாடாளுமன்றம் இன்று காலை கூடியது. அப்போது லோக்சபாவில் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினர்.
ராஜ்யசபாவில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சபை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications