உ.பி. சட்டசபை தேர்தலுக்கான வியூகம் வகுக்க நாளை கூடுகிறது பாஜக செயற்குழு- பலத்த பாதுகாப்பு
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலுக்கான வியூகம் வகுப்பதற்காக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு நாளை அலகாபாத்தில் கூடுகிறது.
உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் எப்படியும் வென்று ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதில் பாஜக மும்முரமாக இருந்து வருகிறது.

இதன் ஒரு கட்டமாக அலகாபாத்தில் நாளை பாஜகவின் செயற்குழு கூடுகிறது. அலகாபாத் நகரில் உள்ள கயாஸ்தா பாடசாலை திடலில் நாளையும் நாளை மறுநாளும் இக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இக் கூட்டத்தில் பாஜக மேலிட தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி நாளை டெல்லியில் இருந்து அலகாபாத் நகருக்கு விமானம் மூலம் வந்து சேர்கிறார். அலகாபாத் நகரில் தங்கியிருக்கும் அவர் நாளை மறுநாள் நடைபெறும் கூட்டத்திலும் பங்கேற்பார்.
பிரதமர் மோடியின் வருகையையொட்டி அலகாபாத் நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன் பின்னர் நாளை மறுநாள் அலகாபாத் நகரில் உள்ள சங்கம் திடலில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட்டவர்கள் பங்கேற்கின்றனர்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications