அமித்ஷாவின் பாதுகாப்பில் குளறுபடி? கான்வாய்க்குள் அத்துமீறி நுழைந்த கார்.. பரபரத்த அதிகாரிகள்
அகர்தலாவில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து அமித்ஷா புறப்பட்டு சென்ற போது அவரது கார் கான்வாய்க்குள் அத்துமீறி ஒரு கார் நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அகர்தலா: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவிற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்று இருந்தார். அகர்தலாவில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து அமித்ஷா புறப்பட்டு சென்ற போது அவரது கார் கான்வாய்க்குள் அத்துமீறி ஒரு கார் நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா நேற்று திரிபுரா மாநிலம் சென்றார்.
சமீபத்தில் தான் அங்கு சட்டமன்ற தேர்தல் முடிந்தது. இந்த மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக மாணிக் சகா இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ளார்.

அத்துமீறி நுழைந்த கார்
இந்த நிலையில், திரிபுரா மாநிலத்தில் முன்னாள் அரச குடும்பத்தை சேர்ந்தவரும் திப்ரா மோதா கட்சியின் தலைவருமான பிரத்யோட் மணிக்யா தெப்புர்மாவை நேற்று அமித்ஷா சந்தித்து பேசினார். கூட்டணி தொடர்பாக இந்த சந்திப்பு இரு தலைவர்களும் ஆலோசித்ததாக சொல்லப்படுகிறது. அமித்ஷாவின் இந்த திரிபுரா பயணத்தின் போது அவரது வாகன அணிவகுப்பிற்குள் அத்துமீறி நுழைந்த காரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாதுகாப்பு வாகனங்கள்
பாதுகாப்பில் இருக்கும் அமித்ஷாவின் வாகனத்திற்கு முன்னும் பின்னும் பாதுகாப்பு வாகனங்கள் அணி வகுத்து செல்லும். அனுமதி பெற்ற வாகனங்களுக்கு மட்டுமே அமித்ஷாவின் கார் அணிவகுப்பில் செல்ல அனுமதி அளிக்கப்படுவதுண்டு. இந்த நிலையில், அகர்தலாவில் இருந்து மாநில அரசின் அரசு விருந்தினர் இல்லத்தில் இருந்து அமித்ஷா கார் புறப்பட்டு சென்றது. அமித்ஷாவின் கார் கான்வாய் சென்று கொண்டிருந்ததால் பிரிவு சாலை ஒன்றில் பொதுமக்களின் வாகனங்களை பாதுகாப்பு படையினர் நிறுத்தி வைத்து இருந்தனர்.

நிற்காமல் சென்ற கார்
அப்போது திடீரென வெள்ளை நிற டாடா டைகோர் கார் ஒன்று அமித்ஷாவின் கார் கான்வாய்க்குள் அத்து மீறி நுழைந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் காரை நிறுத்த முயற்சித்த போதும் கார் நிற்காமல் சென்று விட்டது. இதனால், அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபேற்று வருவதக போலீசார் தெரிவித்தனர். முன்னதாக கடந்த ஆண்டு அமித்ஷாவின் மும்பை பயணத்தின் போது அவரது பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டு இருந்தது.

வித்தியாசமான ஒரு நபர்
ஆந்திர பிரதேச பாஜக எம்.பியின் உதவியாளர் என்று சொல்லிக்கொண்டு 32-வயது நபர் ஒருவர் பாதுகாப்பை மீறி அமித்ஷாவிற்கு நெருக்கமாக சுற்றிக்கொண்டு இருந்தார். மேலும் முக்கிய அரசியல் தலைவர்களுடனும் காணப்பட்டார். வித்தியாசமான ஒரு நபர் அமித்ஷா, முக்கிய தலைவர்களுடன் காணப்பட்டதை பார்த்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த வாலிபர், அவரது பெயர் ஹேமந்த் பவார் எனவும், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த எம்.பி. ஒருவரின் உதவியாளர் என்று கூறினார். ஆனால் அவர் மீது சந்தேகம் அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் அவர் போலியான நபர் என்று தெரியவந்தது. இதையடுத்து கைது செய்து இருந்தனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications