பாகிஸ்தானுடனான பாதுகாப்பு கொள்கையை மாற்ற வேண்டும்: இந்திய ராணுவ தளபதி ஆவேசம்
டெல்லி: பாகிஸ்தான் விஷயத்தில் இந்தியா தனது பாதுகாப்பு கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று இந்திய ராணுவ தலைமை தளபதி தல்பீர் சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள இந்தியா கேட்டில் பதன்கோட் விமானப் படைத்தளத்தில் தீவிரவாத தாக்குதலால் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு ஜெனரல் தல்பீர் சிங் தலைமையில் நூற்றுக்கணக்கான ராணுவத்தினர் இறுதி அஞ்சலி செலுத்தினர். அப்போது அவர் கூறியதாவது: பாகிஸ்தான் உடனான பாதுகாப்புக் கொள்கைகளை இந்தியா மாற்றிக் கொள்ள வேண்டும். இதை பாதுகாப்புத்துறை அதிகாரி என்ற முறையில் கூறுகிறேன்.

ஒவ்வொரு முறையும் பாகிஸ்தான் பல ஆயிரம் வெட்டுக் காயங்களுடன் நம்மை ரத்தம் சிந்த வைக்கிறது. நாம் சில நாட்களுக்கு இதைப் பேசுகிறோம். பின்னர், அப்படியே மறந்து விடுகிறோம் என்றார்.
ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஜே.எஸ். சாந்து பேசுகையில், பாகிஸ்தான் விஷயத்தில் இந்தியா தனது நடவடிக்கைகளை கூர்மையாக்க வேண்டும். தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ராணுவத்தினருக்கு முழு அதிகாரம் அளிக்க வேண்டும். எப்போதும் நாம் மிதவாதிகளாக, பாகிஸ்தானிடம் மென்மையாக நடந்து கொள்கிறோம். இதற்கு விருதாக நம் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன, என்றார்.
இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் மாணவர்கள், ஓய்வுபெற்ற ராணுவத்தினர், அவர்களது குடும்பத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications