யோகி ஆதித்யாநாத் இருக்கும் தெருவில் செல்பி எடுத்தால் ஜெயில்.. உபி மக்களை கதிகலங்க வைக்கும் சட்டம்!
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் வீடு இருக்கும் தெருவில் செல்பி எடுத்தால் ஜெயில் தண்டனை அளிக்கப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
லக்னோ: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் வீடு இருக்கும் தெருவில் செல்பி எடுத்தால் ஜெயில் தண்டனை அளிக்கப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது. இதற்கான எச்சரிக்கை பலகைகள் அங்கு ஒட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அங்கு பெரும் பிரச்சனையை உருவாக்கி இருக்கிறது. மாயாவதிக்கு பின் அவரை போலவே யோகியும் செயல்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இடையில் அகிலேஷ் யாதவ் ஆட்சியில் அடங்கி இருந்த சில மக்களுக்கு எதிரான சட்டங்கள் தற்போது யோகி ஆட்சியில் மீண்டும் கொண்டு வரப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த எச்சரிக்கை பலகை குறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவித்து இருக்கிறார். இந்த சம்பவம் அங்கு அரசியல் வட்டாரத்தில் மீண்டும் புயலை கிளப்பி இருக்கிறது.

செல்பி எடுப்பதால் பிரச்சனை
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 'காலிதாஸ் மார்க்' என்ற பகுதியில் வசித்து வருகிறார். அந்த பகுதியில் நேற்று சிலர் செல்பி எடுத்ததாக போலீசால் எச்சரிக்கை செய்யப்பட்டு அனுப்பப்பட்டு இருக்கிறார்கள். மேலும் மீண்டும் அந்த தெருவிற்குள் எங்காவது செல்பி எடுத்தால் கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

எச்சரிக்கை
இந்த நிலையில் அந்த தெரு முழுக்க போலீஸ் எச்சரிக்கை பலகைகளை வைத்து இருக்கிறது. அதில் இனி இந்த பகுதியில் செல்பி எடுப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் அவர்களுக்கு ஜெயில் தண்டனை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.

அகிலேஷ் யாதவ் கண்டனம்
இந்த எச்சரிக்கை குறித்து அறிந்த அகிலேஷ் யாதவ் இதற்கு கண்டனம் தெரிவித்தார். அதில் ''உபியில் இனி செல்பி எடுத்தால் தண்டனையாம். இதுதான் உபி மக்களுக்கு அரசு கொடுக்கும் புத்தாண்டு பரிசு'' என்று குறிப்பிட்டு இருந்தார். அகிலேஷ் ஆட்சியில் முதல்வர் இருக்கும் போது அவர் வீடு இருக்கும் பகுதியில் சுதந்திரமாக நடமாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

நீக்கப்பட்டது
அகிலேஷ் யாதவின் கண்டனத்திற்கு பிறகு இந்த விஷயம் இணையம் முழுக்க வைரல் ஆனது. இதையடுத்து போலீஸ் அந்த எச்சரிக்கை பலகைகளை நீக்கி இருக்கிறது. உள்ளூர் போலீஸ் யாரிடமும் அனுமதி கேட்காமல் அந்த பலகைகளை வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் அங்கு செல்பி எடுக்க தற்போதும் கட்டுப்பாடு நிலவி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications