பஞ்சாப்: அகாலி தளத்தில் சடுகுடு ஆடுதா பாஜக? பாதல் பதவி விலக சீனியர் 'தலை'கள் போர்க்கொடி!
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் சிரோமணி அகாலி தளத்தில் பெரும் கலகம் வெடித்துள்ளது. அகாலி தளத்தின் தலைவர் பதவியில் இருந்து சுக்பீர் சிங் பாதல் ராஜினாமா செய்ய வேண்டும் என மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். ஆனால் பாஜகவின் தூண்டுதலால் அகாலி தளத்தில் கலகத்தை ஏற்படுத்துவதாக பாதல் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி இருப்பதால் பஞ்சாப் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போதைய லோக்சபா தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 13 தொகுதிகளில் காங்கிரஸ் 7 இடங்களில் வென்றது. ஆளும் கட்சியான ஆம் ஆத்மிக்கு 3 இடங்கள்தான் கிடைத்தன. அகாலி தளம் 1 இடத்திலும் சுயேட்சைகள் 2 இடத்திலும் வெற்றி பெற்றனர். வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சிக்கு 26.30%; ஆம் ஆத்மி கட்சிக்கு 26.02% ; பாஜகவுக்கு 18.56%;அகாலிதளம் கட்சிக்கு 13.42% உள்ளன.

பஞ்சாப் மாநில சட்டசபை, லோக்சபா தேர்தல்களில் தொடர்ந்து அகாலி தளம் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. பஞ்சாப் அரசியல் களமானது காங்கிரஸ் vs ஆம் ஆத்மி என்கிற நிலைமையாக உருமாறிவிட்டது. இம்மாநிலத்தில் அகாலி தளம் , பாஜகவுக்கு வாக்கு வங்கி கணிசமாக இருந்தாலும் இடங்களைக் கைப்பற்ற முடியாத நிலைமைதான் உள்ளன.
இந்த நிலையில் சிரோமணி அகாலி தளத்தின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் ராஜினாமா செய்ய வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். மதத்தையும் அரசியலையும் சமன் செய்யக் கூடியவரிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு பாதல் ராஜினாமா செய்ய வேண்டும் என்பது அதிருப்தியாளர்களின் கோரிக்கை. மேலும் அகாலி தளத்தைக் காப்பாற்ற ஜூலை 1-ந் தேதி முதல் பேரணி, பொதுக்கூட்டங்கள் நடத்தப் போவதாகவும் அதிருப்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஆனால் பாதல் ஆதரவாளர்களோ இது பாஜகவின் அப்பட்டமான சதி; அகாலி தளத்தை உடைத்து அகாலி தள வாக்குகளை கபளீகரம் செய்து பாஜக பஞ்சாப்பில் காலூன்ற முயற்சிக்கிறது. இந்த சதியின் ஒரு பகுதிதான் பாதலுக்கு எதிரான இந்த கலகக் குரல்; ஆகையால் பாதல் ஒரு போதும் ராஜினாமா செய்ய அனுமதிக்கவே மாட்டோம் என்கின்றனர். இதனால் பஞ்சாப் மாநில அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications