அம்மா சோனியா, தங்கை பிரியங்கா சூழ ரேபரேலி தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார் ராகுல் காந்தி!
ரேபரேலி: உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி லோக்சபா தொகுதியில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார். கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதியில் ராகுல் காந்தி ஏற்கனவே போட்டியிட்ட நிலையில் 2-வது முறையாக இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார் ராகுல் காந்தி.
லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் அமேதி, ரேபரேலி ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் மேலிடம் அறிவிக்காமல் இழுத்தடித்து வந்தது. இது கடுமையான விமர்சனங்களையும் உருவாக்கியது.

இந்த நிலையில் வேட்பு மனுத் தாக்கல் கடைசி நாளான இன்று ரேபரேலியில் ராகுல் காந்தியும் அமேதியில் கேஎல் ஷர்மாவும் போட்டியிடுவர் என அறிவிக்கப்பட்டது. அமேதியில் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
ரேபரேலியில் சோனியா காந்தி 2019-ல் வென்றிருந்தார். தற்போது லோக்சபா தேர்தலில் போட்டியிடாமல் ராஜ்யசபா எம்பியாக இருக்கிறார். இதனால் ரேபரேலியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.
ரேபரேலி தொகுதியில் இன்று ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார். தாய் சோனியா காந்தி, தங்கை பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் ராகுல் காந்தி வேட்பு மனுத் தாக்கலின் போது உடனிருந்தனர்.
ரேபரேலியில் பாஜகவின் வேட்பாளராக தினேஷ் பிரதாப் சிங் போட்டியிடுகிறார். ராகுல் காந்தி போட்டியிடுவது குறித்து கருத்து தெரிவித்த தினேஷ் பிரதாப் சிங், சோனியாவும் பிரியங்காவும் ரேபரேலி தொகுதி மக்களுக்குத் துரோகம் செய்துவிட்டனர். சோனியா காந்தி எம்பியாக இருந்த போது பிரியங்கா காந்திதான் ரேபரேலியில் அதிகாரம் செலுத்தினார். பின்னர்தான் கேஎல் ஷர்மாவிடம் அதிகாரம் கொடுக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் சோனியாவோ பிரியங்கா காந்தியோ ரேபரேலி தொகுதி மக்களை ஒருபோதும் சந்திக்கவே இல்லை என்றார்
இதேபோல முன்னாள் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் நிருபம் கூறுகையில், அமேதியை விட்டு ராகுல் ரேபரேலிக்கு ஓடியதே தோல்வி பயம் காரணமாகத்தான். அமேதியில் பாஜக தொண்டர்களின் தேர்தல் பணியைப் பார்த்து காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர் என்றார்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications