"சிகப்பு ரோஜாக்கள்.." 6 பெண்கள்.. கொடூரத்தின் உச்சம்! அதிர வைத்த ஆந்திர சைக்கோ! இப்படியும் நடக்குமா?
விசாகப்பட்டினம்: சிகப்பு ரோஜாக்கள் படம் பாணியில் பெண்களை குறி வைத்து குரூரமாக தனது சைக்கோத் தனத்தை தீர்த்துக் கொண்டுள்ளார் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு ஆண்.
Recommended Video
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள அனகாபள்ளி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்பாபு (45). ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரிந்த ராம் பாபுவுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் பல ஆண்டுகளாகியும் அவர்களுக்கு குழந்தை இல்லை எனக் கூறப்படுகிறது. குழந்தை இல்லாத விரக்தியில் ராம் பாபு மதுவுக்கு அடிமையானார்.
தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் சண்டை போடுவதை ராம்பாபு வழக்கமாக வைத்திருக்கிறார். இதனால் கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்திருக்கிறது.

மனைவி மீது குற்றச்சாட்டு
ஒருகட்டத்தில், மனைவியை சந்தேகப்பட தொடங்கினார் ராம்பாபு. அக்கம்பக்கத்தில் உள்ள ஆண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி மனைவியை அவர் துன்புறுத்த ஆரம்பித்தார். ஒருகட்டத்தில் வீட்டின் உரிமையாளருடன் தனது மனைவிக்கு முறையற்ற தொடர்பு இருப்பதாக உறவினர்களிடம் கூறிய ராம்பாபு, இனி அவருடன் தன்னால் வாழ முடியாது எனக் கூறினார். இதனால் 4 ஆண்டுகளுக்கு முன்பு ராம்பாபுவின் மனைவி அவரை பிரிந்து சென்றுவிட்டார்.

நிதி மோசடி
இதுபோன்ற சூழலில், தான் பணிபுரியும் ரியல் எஸ்டேட் நிறுவனம் தனக்கு பல ஆண்டுகளாக கிடைக்க வேண்டிய கமிஷன் தொகையை தராமல் ஏமாற்றியதை ராம்பாபு சில மாதங்களுக்கு முன்பு கண்டுபிடித்தார். இதுகுறித்து தனது முதலாளிகளிடம் கேட்ட போது அவரை அவர்கள் பணிநீக்கம் செய்தனர். இதனால் வேலையும் போனது.
மனைவியும் ஏமாற்றிவிட்டார்; வேலை செய்யும் இடத்திலும் தன்னை ஏமாற்றிவிட்டனர் என்று எண்ணி எண்ணி மனம் வெதும்பிய ராம்பாபு, ஒருகட்டத்தில் சைக்கோவாக மாறினார்.

சைக்கோவாக மாறினார்
மனைவி தன்னை ஏமாற்றியதால் அவருக்கு பெண்கள் மீது ஒருவித வெறுப்பும், கோபமும் உருவானது. இதையடுத்து பெண்களை கொலை செய்ய அவர் முடிவு செய்தார். அதன்படி, கடந்த 2 ஆண்டுகளாக விசாகப்பட்டினத்தில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து அவர்களை கொலை செய்தார் ராம்பாபு. கொலை செய்ததுடன் நிற்காமல் அந்தப் பெண்களின் சடலங்களுடன் உல்லாசமாகவும் ராம்பாபு இருந்துள்ளார். இதுபோல 6 பெண்களை அவர் கொலை செய்திருக்கிறார்.

6 பெண்கள்
விசாகப்பட்டினத்தில் நடந்து வரும் இந்த தொடர் கொலைகள் குறித்து போலீஸார் துப்புத் துலக்கி வந்தனர். ஆனால் கொலையாளி குறித்து எந்த தடயமும் கிடைக்காமல் இருந்துள்ளது. இந்த சூழலில்தான், கடந்த மாதம் தான் கொலை செய்த பெண்ணின் வீட்டை நோட்டம் பார்ப்பதற்காக ராம்பாபு நேற்று சென்றிருக்கிறார். அப்போது அங்கு மஃப்டியில் இருந்த போலீஸாருக்கு அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் பிடித்து விசாரித்த போது, பெண்களை கொலை செய்து வந்ததை அவர் ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, போலீஸார் ராம்பாபுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பெண்களை தொடர்ச்சியாக கொலை செய்து வந்த சைக்கோ கொலையாளி பிடிபட்டது ஆந்திர மக்களை நிம்மதி அடையச் செய்துள்ளது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications