நாளைக்கு காய்கறி விலை இதுதான்பா.. உ.பி.யில் பெட்டிங் கட்டி விளையாடிய 7 பேர் கைது!
காசியாபாத்: பங்குச் சந்தை பெட்டிங், கிரிக்கெட் பெட்டிங், எலெக்ஷன் பெட்டிங் வரிசையில் சேர்ந்துள்ளது காய்கறி பெட்டிங்... உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் இப்படி காய்கறி விலைகள் மீது பெட்டிங் கட்டி விளையாடியதாக 7 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெங்காயம் உள்ளிட்ட காய்கறி விலைகள் நிலையானதாக இருப்பதுமில்லை.. திடுமென வீழ்வதும் திடுமென விண்ணை முட்டுவதுமாக கண்ணீரை வரவழைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த விலை தடுமாற்றமே சிலருக்கு விளையாட்டாகவும் போய்விட்டது.

காய்கறி பெட்டிங்
இப்படி ஏறி இறங்கும் காய்கறி விலைகளையே பெட்டிங் பொருளாக்கிவிட்டனர் உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்வாசிகள்

எப்படி பெட்டிங்?
இன்று இந்த காய்கறியோட விலை இது.. நாளை இந்த ரேட்தான் விற்கும் என்று நிர்ணயித்து அதன் மீது பெட்டிங் கட்டுவதுதான் 'காய்கறி' பெட்டிங்காம்.

போலீசுக்கு புகார்
ஏழை, நடுத்தர மக்களின் கண்ணீரை வரவழைக்கும் காய்கறி விலை உயர்விலும்கூடவா பெட்டிங் வைத்து விளையாடுவீர்கள் என்று கொந்தளித்த சிலர் போலீசில் போட்டுக் கொடுத்துவிட்டனர்.

சுற்றி வளைத்த போலீஸ்
இதைத் தொடர்ந்து காய்கறி பெட்டிங் நடைபெற்ற சியானி கேட் என்ற இடத்தை காசியாபாத் போலீசார் சுற்றி வளைத்தனர். காய்கறி பெட்டிங்கில் ஈடுபட்டிருந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

அனைவரும் இளைஞர்கள்
கைது செய்யப்பட்ட அனைவருமே 20 முதல் 30 வயது இளைஞர்கள்தான். இவர்கள் பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்றும் போலீசார் கூறுகின்றனர்.
-
துடி துடித்த தூத்துக்குடி.. குடும்ப கவுரவத்துக்காக நடந்த கொடூரம்! 19 வயது இளம்பெண் ஆணவக்கொலை! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications