பாஜக எம்.பி. சத்யபால் சிங் வீட்டில் ரெய்டு: விபச்சாரம் நடத்தியவர் கைது, 2 பெண்கள் மீட்பு
மும்பை: மும்பையில் பாஜக எம்.பி சத்யபால் சிங்கிற்கு சொந்தமான வீட்டில் விபச்சாரம் நடந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அந்தேரி பகுதியில் முன்னாள் போலீஸ் கமிஷனரும், பாஜக எம்.பியுமான சத்யபால் சிங்கின் வீட்டில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த வீட்டிற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.
அங்கு விபச்சார தொழில் செய்து வந்த வகில் ஷா என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த வீட்டில் இருந்த 2 பெண்களை போலீசார் மீட்டனர். சத்யபால் சிங் தனது வீட்டை இந்தியாபுல்ஸ் நிறுவனத்திற்கு வாடகைக்கு விட அவர்கள் ஷாவை வீட்டை பார்த்துக் கொள்ள வைத்துள்ளனர். ஆனால் அவரோ அந்த வீட்டில் விபச்சார தொழில் நடத்தி வந்துள்ளார்.
வாடகைக்கு வீடு எடுத்துவிட்டு விதிமுறைகளை மீறியதற்காக இந்தியாபுல்ஸ் நிறுவனம் மீது வழக்கு தொடரப் போவதாக சிங் தெரிவித்துள்ளார். கைது நடவடிக்கை குறித்து அறிந்த உடன் இந்தியாபுல்ஸ் நிறுவனம் ஷாவை பணிநீக்கம் செய்துள்ளது.
இது குறித்து இந்தியாபுல்ஸ் நிறுவனம் சார்பில் கூறுகையில்,
வீட்டை பார்த்துக்கொள்ள தான் ஷாவை நியமித்தோம். அவரின் நடவடிக்கைகள் குறித்து நிறுவனத்திற்கு தெரியாது என்று தெரிவித்துள்ளது.
மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த நேர்மைக்கு பெயர்போன சத்யபால் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் சேர்ந்து உத்தர பிரதேச மாநிலம் பாக்பட் தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications