கொல்கத்தாவில் பயங்கரம்.. ப்ளே ஸ்கூலில் 2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை
கொல்கத்தாவில் ப்ளே ஸ்கூலில் 2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை நேர்ந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா: ப்ளே ஸ்கூலில் 2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை நேர்ந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு சட்டங்களை இயற்றி வருகிறது.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடு இந்தியா என இங்கிலாந்து தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய சர்வேயில் அண்மையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்தது.

கொல்கத்தா ப்ளே ஸ்கூல்
ஆனாலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாலியல் தொல்லை குறைந்தபாடில்லை. கொத்தாவில் ப்ளே ஸ்கூல் ஒன்றில் இரண்டு வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை நேர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 வயது சிறுவன்
கொல்கத்தாவில் இயங்கி வரும் ப்ளே ஸ்கூல் ஒன்றில் 2 வயது சிறுவனை அவரது பெற்றோர் சேர்த்துள்ளனர். இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி பள்ளிக்கு சென்று வந்த சிறுவனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

மருத்துவ சோதனையில் உறுதி
இதையடுத்து சிறுவனுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் பாலியல் தொல்லை நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் பள்ளி நிர்வாகம் இச்சம்பவத்தை மறுத்துள்ளது.

காட்சிகள் அழிப்பு
இதற்கிடையே பள்ளியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் 26-ம் தேதியில் இருந்து எந்த ஒரு காட்சியும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளது என பெற்றோர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாலியல் தொல்லை அதிர்ச்சி
சிறுவனின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. 2 வயது ஆண் குழந்தைக்கு நேர்ந்த பாலியல் கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications