அர்மார்... இந்தியாவில் ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்க்கும் 26 வயது இணைப்புப் பாலம்!
டெல்லி: 26 வயதுதான் ஆகிறது ஷபி அர்மார் என்ற இந்த இளைஞருக்கு. ஆனால் இந்த வயதில் இந்த இளைஞர் செய்துள்ள "சாதனை" நடுநடுங்க வைக்கிறது. இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆளெடுக்கும் நபர்களுக்கும், அந்த அமைப்புக்கும் இடையேய முக்கிய இணைப்புப் பாலமாக விளங்கி வருகிறாராம் அர்மார்.
இவர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆட்களை அனுப்புவதில் முக்கியப் பங்கு வகிக்கும் நபர் என்றும் விசாரணை அதிகாரிகள் கூறுகிறார்கள். இவர் குறித்து இன்டர்போல் போலீஸ் பிறப்பித்த உத்தரவில், தீவிரவாத செயல்களில் ஈடுபட்டது, நிதி சேகரித்தது, ஆட்களைத் திரட்டிது உள்ளிட்ட பல்வேறு புகார்களை அடுக்கியுள்ளது.

கர்நாடக மாநிலம் பத்கலைச் சேர்ந்தவர் அர்மார். இவரது பெயர் முகம்மது ஷபி. அர்மார் என்பது குடும்பப் பெயராகும். ஆங்கிலம், அட்டகாசமாக பேசுவார். அது போக கன்னடம், உருது, இந்தி ஆகியவையும் நன்றாகத் தெரியும். இவரது புனை பெயர் யூசுப் அல் ஹிந்தி. இவர் அன்சர் உல் தவாஹித் என்ற அமைப்பின் நிறுவனரான சுல்தான் அர்மாரின் சகோதர் ஆவார். இந்த அமைப்புதான் ஐஎஸ்ஐஎஸ் மைப்புக்கு ஆட்களைத் திரட்டி அனுப்பும் அமைப்பாகும்.
தனது சகோதரரின் நிழலில்தான் ஆரம்பத்தில் வாழ்ந்து வந்தார் ஷபி. தனது சகோதரருடன் சேர்ந்துதான் அவர் ஆட்களைத் திரட்டும் வேலையில் ஈடுபட்டார். சமீபத்தில்தான் அதிலிருந்து வெளியே வந்துள்ளார். காரணம், இவரது சகதோரர் சுல்தான் சிரியாவில் நடந்த சம்டையின்போது கொல்லப்பட்டு விட்டார். இதனால் ஷபி வசம் அனைத்துப் பொறுப்புகளும் வந்து சேர்ந்தன.
இந்தியா முழுவதும் ஐஎஸ் ஆமைப்புக்கு ஆட்களைத் திரட்டும் பணிக்காக பல்வேரு கிளைகளை உருவாக்கியவர் ஷபி. சமீபத்தில் இப்படிப்பட்ட ஆளெடுப்பு மையம் ஒன்றைக் கண்டுபிடித்தது உளவுப் பிரிவு. அதனைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் மும்பையைச் சேர்ந்த முடாபிர் ஷேக் என்பவரைக் கைது செய்தனர். அவரிடம் அர்மார் பேசிய பேச்சையும் உளவுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். அதில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு ஆளெடுப்பு மையத்தை அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் அர்மார்.
இதன் மூலம் ஆளெடுப்புப் பணிகள் தங்கு தடையின்றி நடக்க உதவும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவில் மிகப் பெரிய அளவில், வலுவான அமைப்பாக ஐஎஸ்ஐஎஸ்ஸை உருவாக்குவதே இவர்களின் முக்கியப் பணியாக, நோக்கமாக இருந்துள்ளது.
மேலும் தனது சகோதரர் உருவாக்கிய அன்சர் உல் தவாஹித் அமைப்பின் பெயரையும் கூட ஜுநுத் அல் கலீபா இ ஹிந்த் என்றும் மாற்றியுள்ளார் அர்மார். இதன் மூலம் பாதுகாப்புப் படையினரின் காட்டமான பார்வையிலிருந்து தப்ப முடியும் என்பது அவரது எண்ணம்.
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் பல்வேறு தவணைளாக ரூ. 6 லட்சம் வரை ஆளெடுக்கும் பணிக்காக செலவிட்டுள்ளாராம் அர்மார்.
-
“இந்தியா என்னை 100% நம்பலாம்.. நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன்!” ஓபனாக பேசிய டிரம்ப்! -
இந்தியர்கள் 3 நாடுகளுக்கு செல்ல அதிரடி தடை.. அறிவித்த மத்திய அரசு.. பின்னணியில் ‘எபோலா' நோய்த்தொற்று -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
காரை அடிக்கடி துடைத்தால் இப்படியொரு பிரச்சனை வருமாம்.. தெரியாம கூட இதை மட்டும் செய்ய வேண்டாம்! -
கரப்பான் பூச்சி கட்சிக்கு பின்னணியில் பாகிஸ்தான்? முடக்கப்பட்ட பக்கங்கள்.. அடுத்து திடீர் விளக்கம் -
சீனாவில் இருந்தபடி ஹைதராபாத்தில் ஆபரேஷன்! 3,000 கிமீ தொலைவில் ரோபோவை கண்ட்ரோல் செய்த இந்திய டாக்டர் -
பெட்ரோல், டீசல் விலை மேலும் உயரும்.. இதை தவிர்க்கவே முடியாது.. BPCL முன்னாள் இயக்குனர் எச்சரிக்கை -
92% மார்க் எடுத்த பிறகும் நேர்ந்த சோகம்! நீட் ரத்தால் கர்நாடக மாணவி விபரீதம்.. கண்ணீரில் பெற்றோர் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை












Click it and Unblock the Notifications