டெல்லி ஷாகீன் பாக் போராட்டத்தில் சுட்ட மர்ம நபர்.. ஆம் ஆத்மி உறுப்பினர்.. போலீஸ் ஷாக் தகவல்!

கடந்த வாரம் டெல்லி ஷாகீன் பாக் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்திய நபர், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர் என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த வாரம் டெல்லி ஷாகீன் பாக் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்திய நபர், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர் என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் சிஏஏவிற்கு எதிராக அமைதியாக நடந்து வந்த போராட்டத்தில் உள்ளே புகுந்த நபர் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார்.அவர் இப்படி துப்பாக்கியால் சுட்டதில் ஒரு கல்லூரி மாணவர் கையில் காயம் அடைந்தார்.

துப்பாக்கியால் சுட்ட நபரின் பெயர் ராம் பகத் கோபால். இவர் 18 வயது கூட நிரம்பாத சிறுவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரை போலீசார் 14 நாட்கள் காவலில் எடுத்துள்ளார்.

துப்பாக்கி சூடு

துப்பாக்கி சூடு

இந்த நிலையில் அதன்பின் இரண்டு நாட்கள் கழித்து டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலை அருகே இருக்கும் ஷாகீன் பாக் பகுதியிலும் துப்பாககி சூடு நடந்தது. மர்ம நபர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் வந்து அங்கு வானத்தை நோக்கி சுட்டார். இது இந்துக்களின் நாடு, இங்கிருக்கும் இஸ்லாமியர்கள் வெளியேற வேண்டாம். ஜெய் ஸ்ரீ ராம் என்று அவர் முழக்கமிட்டார். இந்த துப்பாக்கி சூடு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீசார் எப்படி

போலீசார் எப்படி

இந்த நபர் குறித்து போலீசார் தற்போது முக்கியமான விவரங்களை வெளியிட்டுள்ளனர். அதில், துப்பாக்கியால் ஷாகீன் பாக் பகுதியில் சுட்ட நபரின் பெயர் கபில் குஜ்ஜார். இவர் டெல்லியை சேர்ந்தவர். இவர் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர் என்று வாக்குமூலம் அளித்துள்ளார். சில வருடங்களுக்கு முன் இவர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து இருக்கிறார்.

அப்பாவும் என்ன கட்சி

அப்பாவும் என்ன கட்சி

இவரின் அப்பாவும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர் என்று வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். இதற்கான புகைப்பட ஆதாரங்கள் இவரின் போனில் இடம்பெற்றுள்ளது. இவர் கட்சியில் சேரும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் கசிந்து இருக்கிறது. டெல்லி தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த விஷயம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொள்கை

கொள்கை

ஆர்எஸ்எஸ், பாஜக போன்ற வலதுசாரி கொள்கை கொண்ட அமைப்பு, கட்சியை சேர்ந்தவராக கபில் குஜ்ஜார் இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆம் ஆத்மி கட்சியும் இதே புகாரைத்தான் வைத்து வந்தது. ஆனால் தற்போது திடீர் திருப்பமாக கபில் குஜ்ஜார் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர் என்று போலீஸ் தெரிவிக்கிறது. இதற்கான புகைப்படங்களும் வெளியாகி உள்ளது, ஷாகீன் பாக் போராட்டக்காரர்களை இந்த புகைப்படம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+