அதிர வைக்கும் அல் கொய்தாவின் ”ஷாஹீன் போர்ஸ்” பெண்கள் படை!
பெங்களூர்: அதிர வைக்கும் ஒரு பெண்கள் படையை இந்தியத் துணைக் கண்டத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கியுள்ளது அல் கொய்தா அமைப்பு. ஷாஹீன் போர்ஸ் என்று இதற்குப் பெயர் சூட்டியுள்ளது அல் கொய்தா.
முன்பு போல இல்லாமல் இப்போதெல்லாம் தற்கொலைப் படையை உருவாக்க பெண்களை அதிக அளவில் அனைத்துத் தீவிரவாத அமைப்புகளும் பயன்படுத்தி வருகின்றன. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பும் பெண் தற்கொலைப் படையினரை வைத்துள்ளது. அந்த அமைப்பு தனது மனித வெடிகுண்டான சஜிதா அல் ரிஷ்வியை மீட்க கடுமையாக போராடி வருகிறது. இந்த நிலையில் இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசத்தை உள்ளடக்கிய தனது துணைக் கண்டப் பிரிவுக்கு பெண் தற்கொலைப் படையை அல் கொய்தா உருவாக்கி வருகிறதாம்.

இந்த நாடுகளிலிருந்து பெண்களை தற்கொலைப் படையில் சேர்க்க அது நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆட்களையும் திரட்டி வருகிறதாம்.
இந்திய துணைக் கண்டத்திற்கான தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள ஆசிம் உமர் என்பவர், அல் கொய்தா ஷாஹீன் படையை அறிவதித்துள்ளார். இதன் தலைவராக அபின்டா ஆயிஷா என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அல் கொய்தா பிரிவின் சர்வதேச தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி வெளியிட்டுள்ளார்.
குழந்தைகளை ஜிஹாத்தை விரும்பச் சொல்லுங்கள்:
இதுதொடர்பாக அது பல துண்டுப் பிரசுரங்களையும் வெளியிட்டுள்ளது. அதில் உங்களது குழந்தைகளை ஜிஹாத்தை விரும்பும் வகையில் வளருங்கள். ஜிஹாத்துக்காக அனைத்து இஸ்லாமியப் பெண்களும் உயிரைத் தியாகம் செய்யத் தயாராக வேண்டும். கடவுளின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இந்தத் துண்டுப் பிரசுரங்கள் முதலில் ஆப்கானிஸ்தானில்தான் காணப்பட்டன. தற்போது பாகிஸ்தானிலும் இது விநியோகிக்கப்படுகிறது. இதற்கு ஆதரவு கிடைத்துள்ளதா என்பது தெரியவில்லை என்று இந்திய உளவு அமைப்புக்ள் கூறுகின்றன. ஆனால் பெண்களை அதிகஅளவில் சேர்க்க தீவிரவாத அமைப்புகள் முயல்வது மட்டும் உறுதியாகியுள்ளது.
எண்ணிக்கை கூடுகிறது:
மோசமான தலிபான்கள் என்று அமெரிக்காவாலும், பாகிஸ்தானாலும் வர்ணிக்கப்படும் தெஹரிக் இ தலிபான் அமைப்பில் 500 பெண்கள், தற்கொலைப் படையில் சேர்ந்து பயிற்சி பெற்று வருவது தெரிய வந்துள்ளது. முற்றிலும் பெண்கள் கொண்ட ஒரு பிரிவை இந்த தீவிரவாத அமைப்பு உருவாக்கி வருகிறது. மேலும் பல பெண்களையும் இது இணைத்து வருகிறது.
சமீபத்தில் ஐஎஸ் அமைப்பும் கூட முற்றிலும் பெண்களைக் கொண்ட ஒரு பிரிவை உருவாக்க முடிவு செய்தது. இந்த பிரிவுக்கு சஜிதாவை தலைவராக்கவும் அது தீர்மானித்துள்ளது. இதற்காகவே சஜிதாவை மீட்க அது முயன்று வருகிறது. சஜிதா தற்போது ஜோர்டான் நாட்டில் சிறைவைக்கப்பட்டுள்ளார். சஜிதாவும் அவரது கணவரும் தற்கொலைப் படையாக மாறி, ஜோர்டான் நாட்டில் ஒரு ஹோட்டலில் குண்டு வீசினர். இதில் சஜிதாவின் கணவர் உயிரிழந்தார். ஆனால் சஜிதாவின் இடுப்பில் கட்டியிருந்த குண்டு வெடிக்காமல் போனதால் அவர் பலியாகவில்லை குண்டும் வெடிக்கவில்லை, சிக்கிக் கொண்டார்.
ஐஎஸ் அமைப்பின் தலைவரான அபு பக்கீர் அல் பக்தாதிக்கு மிகவும் நெருக்கமானவரான அபு முசாப் சர்காவியின் சகோதரிதான் இந்த சஜிதா.
லஷ்கர் இ தொய்பா அமைப்பும் கூட பெண்கள் அமைப்பை உருவாகிகுயள்ளது. அதன் பெயர் டுக்தரீன் இ தொய்பா என்பதாகும். தார் இ சோபா என்ற இன்னொரு பிரிவையும் அது வைத்துள்ளது. வங்கதேசத்தின் ஜமாத் உல் முஜாஹிதீன் அமைப்பும் கூட ஒரு பெண்கள் பிரிவை வைத்துள்ளது. புர்த்வான் சம்பவத்தின்போது இது தெரிய வந்தது.
ஏன் பெண்களைச் சேர்க்கிறார்கள்?
பெண் தற்கொலைப் படையினர்தான் துல்லியமாக தாக்குதலை நடத்துகிறார்கள். 10 தாக்குதல்களில் 8 வெற்றிகரமாக முடிவதாக கணக்கு ஒன்று கூறுகிறது. காரணம், பாதுகாப்பு்ப் படையினரின் சோதனையிலிருந்து பெண்களால் எளிதில் தப்பி விட முயல்வதால். மேலும் ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் அமைதியாக, நிதானமாக செயல்படுகிறார்கள். மேலும் அவர்களுக்கு கற்றுக் கொள்ளும் திறனும் அதிகமாக உள்ளது.
தாக்குதலின்போது கணவர், பிள்ளைகள், குடும்பத்தினரை இழந்த பெண்கள்தான் குறி வைத்து தீவிரவாதிகளால் தேர்வு செய்யயப்படுகிறார்கள். பழிவாங்கும் உணர்வை அவர்களுக்குள் விதைத்து இழுக்குிறார்கள்.
மேலும் பல இடங்களில் தங்களது பிள்ளைகளை தீவிரவாத அமைப்பில் சேர்க்குமாறு அறிவுரை கூறுமாறும் பெண்களுக்கு மூளைச் சலவை செய்யப்படுகிறதாம். இது பல நேரங்களில் வெற்றியைத் தருவதாகவும் உளவுத்துறை கூறுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications