அரசு கருவூலத்தில் போதிய பணமில்லையா.. 'அளவு குறைப்பு' அறிவிப்பின் பின்னணி என்ன?
டெல்லி: அரசிடம் போதிய அளவுக்கு பணம் இல்லையோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் இன்று அளித்த பேட்டி.
சில நாட்களுக்கு முன்புதான் அரசு வெளியிட்ட அறிவிப்பில், பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்துவிட்டு, புதிய ரூபாய் நோட்டுக்களை பெற்றுக்கொள்ளும் உச்சவரம்பு ரூ.4000லிருந்து ரூ.4500ஆக உயர்த்தப்படுவதாக கூறப்பட்டது. அதாவது பழைய ரூபாய் நோட்டுக்களை எவ்வளவு வேண்டுமானாலும் கணக்கில் டெபாசிட் செய்துவிடலாம். ஆனால் அதற்கு மாற்றாக புதிய ரூபாய் நோட்டுக்களை பெறுவதில்தான் இந்த உச்சவரம்பு உண்டு.

இந்த நிலையில், சக்திகாந்த் தாஸ் இன்று அளித்த பேட்டியில் மாற்றிக்கொள்ளும் பண அளவு ரூ.2000 மட்டும் என்கிறார். எஞ்சிய பணத்தை ஏடிஎம்கள் வாயிலாகவே எடுக்க முடியும். அவையோ பெரும் கியூவால் மூச்சு திணறிக் கொண்டுள்ளன. பல ஏடிஎம்கள் பணமின்றி மூடப்பட்டுள்ளன.
திடீரென பழைய ரூ.500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு ஒழித்துவிட்டதால் அதற்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுக்களை அடிப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அரசின் கையிருப்பில் போதிய பணம் இல்லாததாலேயே மாற்று மதிப்பை குறைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. திரும்ப திரும்ப மக்கள் சென்று பணம் மாற்றிக்கொள்வதை தவிர்க்கவே கையில் மை வைக்கும் நடைமுறையையும் அரசு கொண்டுவந்துள்ளது. இவையெல்லாம், அரசிடம் போதிய அளவு பணம் இல்லாததை காண்பிப்பதாகவே உள்ளன.
ஆனால், சக்திகாந்த் தாஸிடம் நிருபர்கள் இதுகுறித்து இன்று கேட்டபோது, அரசிடம் போதிய பணம் இருக்கிறது என கூறினார். அதேநேரம் வங்கி பணியாளர்களின் பணி சுமையை குறைக்கவே இந்த நடவடிக்கை என்கிறார் அவர். இருப்பினும் மக்கள் வதந்திகளை நம்பி கூட்ட நெரிசலில் சிக்காமல் கூடுமான வரையில் கார்டுகளை பயன்படுத்திக்கொள்வதே இப்போதுள்ள ஒரே மார்க்கம்.
-
மத்திய அரசின் புதிய சேவை.. உங்கள் பணம், உங்கள் கையில்.. இனி ஒரு ரூபாய் கூட மிஸ் ஆகாது! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications