பீகார் தேர்தலில் தனித்துப் போட்டி... முலாயம் சிங்கை சமாதானப்படுத்த லாலு பிரசாத், சரத் யாதவ் மும்முரம
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் தொகுதிப் பங்கீட்டு பிரச்சனையால் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள சமாஜ்வாடிக் கட்சியின் தலைவர் முலாயம் சிங்கை சமாதானப்படுத்தும் முயற்சியில் ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத், ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் ஆகியோர் மும்முரமாக முயற்சி மேற்கொண்டுவருகின்றனர்.
பீகார் சட்டசபையில் உள்ள 243 தொகுதிகளுக்கும் ஓரிரு மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்த ஜனதா பெயரிலான அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளன. அத்துடன் காங்கிரஸ் கட்சியும் இந்தக் கூட்டணியில் இணைந்திருக்கிறது.

ஆனால் தொகுதிப் பங்கீட்டில் சமாஜ்வாடிக் கட்சிக்கு 5 ஒதுக்கப்பட்டுள்ளதற்கு அக்கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து முலாயம்சிங் யாதவை சமாதானப்படுத்தும் முயற்சியில் 'ஜனதா கூட்டணி'யின் மூத்த தலைவர்களான சரத் யாதவ், லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லியில் முலாயம் சிங்கை அவர்கள் இருவரும் நேற்று சந்தித்துப் பேசினர். ஆனால் இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இந்தச் சந்திப்பு தொடர்பாக சமாஜவாதிக் கட்சியும் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. அதேசமயம், சரத் யாதவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும் என்றார்.
முலாயம் சிங்கை சந்தித்ததைத் தொடர்ந்து, பாட்னாவில் ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவரும், பீகார் முதல்வருமான நிதீஷ் குமாரை சந்தித்துப் பேச சரத் யாதவ் திட்டமிட்டுள்ளார். அந்தப் பேச்சுவார்த்தையின் முடிவிலேயே, ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணியில் சமாஜ்வாடி நீடிக்குமா? இல்லையா? என்பது குறித்து தெரிய வரும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications