சுனந்தா கொலை வழக்கு: 48 மணிநேரத்திற்குள் தரூரிடம் போலீஸ் விசாரணை
டெல்லி: சுனந்தா கொலை வழக்கு பற்றி முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரிடம் 48 மணிநேரத்தில் விசாரணை நடத்தப்படும் என்று டெல்லி போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி டெல்லியில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் பிணமாகக் கிடந்தார். அவர் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டதாக அண்மையில் டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ். பஸ்ஸி தெரிவித்தார். இதையடுத்து சுனந்தாவின் வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சசி தரூருக்கு டெல்லி போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அவர் இன்று மாலை டெல்லிக்கு வருவார் என்று கூறப்படுகிறது.
இது குறித்து கமிஷனர் பஸ்ஸி கூறுகையில்,
தரூருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அவரிடம் விரைவில் விசாரணை நடத்துவோம். நாளை அல்லது நாளை மறுநாள் அவரிடம் விசாரிக்கப்படும். இந்த வழக்கு பற்றி தெரிந்தவர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தப்படும் என்றார்.
சுனந்தாவை கொலை செய்தது யார் என தரூருக்கு தெரியும் என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications