"அடுத்த ஜனாதிபதியாக அமிதாப் வர வேண்டும்"... சத்ருஹன் சின்ஹாவின் ‘பிக்’ விருப்பம்
பாட்னா: இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவராக பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வர வேண்டும் என நடிகரும், பாஜக எம்.பி.யுமான சத்ருஹன் சின்ஹா விருப்பம் தெரிவித்துள்ளார்.
பீகார் தலைநகர் பாட்னாவில் சத்ருஹன் சின்ஹாவின் வாழ்க்கை வரலாறு குறித்த புத்தக வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சத்ருஹன் சின்ஹா கலந்து கொண்டு, தனது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் சத்ருஹன் சின்ஹா.

உண்மையில்லை...
அப்போது, பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து பேசிவரும் சத்ருஹன் சின்ஹா, விரைவில் அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாக வெளியான தகவல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘பாஜகவால் புறக்கணிக்கப்படுகிறேன் எனக் கூறப்படுவது உண்மையல்ல. அரசியலை நான் தொழிலாகப் பார்க்கவில்லை. ஒரு சேவையாகவே நினைக்கிறேன்.

ஓய்வில்லை...
சாமானிய மக்களுக்கு நன்மை செய்வதற்காகவே அரசியலுக்கு வந்தேன். அத்தகைய மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். எனவே, அரசியலில் இருந்து ஓய்வுபெறும் பேச்சுக்கே இடமில்லை' எனப் பதிலளித்தார்.

அமிதாப்...
அதனைத் தொடர்ந்து, "நீங்கள் குடியரசுத் தலைவராக வேண்டும் என்று அமிதாப் கூறியுள்ளாரே' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு, ‘இது அமிதாப்பின் பெருந்தன்மை. அதேவேளையில், பிரணாப் முகர்ஜிக்குப் பிறகு குடியரசுத் தலைவர் பதவியை அமிதாப் அலங்கரித்தால் நான் மகிழ்ச்சி அடைவேன்.

பெருமை...
கலாசார ரீதியிலும், சமூகத்துக்காகவும் அமிதாப் பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளார். அவர் குடியரசுத் தலைவரானால் அது பெருமைக்குரிய விஷயமாகும்' என்றார் சத்ருஹன் சின்ஹா.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications