இண்டிகோ விமானத்தில் ஏறிய தாய்.. பைலட்டாக இருந்த மகன் கொடுத்த ‛சர்ப்ரைஸ்'.. பயணிகள் நெகிழ்ச்சி
அமராவதி: இண்டிகோ விமானத்தில் பைலட்டாக (கேப்டன்) இருக்கும் ஜஸ்வந்த் வர்மா தன்னுடன் முதல் முறையாக பயணிக்க வந்த தாய்க்கு கொடுத்த சர்ப்ரைஸை சக பயணிகள் கைத்தட்டி பாராட்டினர். மேலும் தன்னை பைலட்டாக மாற்றுவதற்கு தனது தாய் எதிர்கொண்ட சிரமங்களை கூறிய கேப்டன் ஜஸ்வந்த் வர்மா, அம்மா நீங்க இல்லைனா நான் பைலட்டாக மாற சாத்தியம் இருந்து இருக்காது எனக்கூறியது அனைவரையும் நெகிழ வைத்தது.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ஜஸ்வந்த் வர்மா. இவர் இண்டிகோ விமானத்தில் பைலட்டாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஜஸ்வந்த் வர்மா கேப்டனாக இருந்த இண்டிகோ விமானத்தில் முதல் முறையாக அவரது தாய் பயணிக்க வந்தார்.

இதுபற்றி அறிந்த ஜஸ்வந்த் வர்மா தனது தாய்க்கு சிறப்பான முறையில் வரவேற்பு கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அதோடு தன்னை பைலட்டாக மாற்றுவதற்கு தாய் பட்ட கஷ்டங்களை கூறி அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தார்.
அதன்படி ஜஸ்வந்த் வர்மா பைலட்டாக இருக்கும் இண்டிகோ விமானத்தில் அவரது தாய் ஏறினார். அப்போது விமானத்தில் வாசலில் வந்து நின்று ஜஸ்வந்த் வர்மா வரவேற்றார். தாயிக்கு பூங்கொத்து கொடுத்து காலில் விழுந்த ஆசீர்வாதம் பெற்றார். அதனை கண்டு அவரது தாய் மகிழ்ச்சியடைந்தார். சகபயணிகள் கைத்தட்டினர். அதன்பிறகு கேப்டன் ஜஸ்வந்த் வர்மா பயணிகள் மத்தியில் பேசினார்.
ஜஸ்வந்த் வர்மா பேசும்போது, ‛‛அனைவருக்கும் மதிய வணக்கம். நான் உங்கள் கேப்டன் ஜஸ்வந்த் பேசுகிறேன். உங்கள் பயணத்திற்கு இண்டிகோவைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. இன்று எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாள். ஏனென்றால் விமானியாகும் எனது கனவையும் ஆதரித்த என் அம்மா இன்று என்னுடன் முதல் முறையாக இந்த விமானத்தில் பயணம் செய்கிறார். தயவு செய்து அவருக்காக பெரிய கைத்தட்டலை வழங்குங்கள்'' என்றார். இதையடுத்து பயணிகள் அனைவரும் கைத்தட்டி ஜஸ்வந்தின் தாயை வரவேற்றனர்.
அதன்பிறகு ஜஸ்வந்த தொடர்ந்து பேசினார். ‛‛நாங்கள் திருப்பதி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள். நான் விமானியாக வேண்டும் என்பது எங்களின் கற்பனைக்கு எட்டாத ஒன்றாக இருந்தது. ஆனால் தூக்கமின்றி உழைத்து, கல்வி கடன் வாங்கி, இஎம்ஐ செலுத்தி என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்தவர் என் அம்மா தான்.
என் அம்மாவால் தான் நான் இங்கே ஒரு கேப்டனாக நிற்கிறேன். விமானத்தில் பறக்கிறேன். என் கனவை எட்டிபிடித்து வாழ்க்கையை ரசிக்கிறேன். ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் என் அம்மாவால் தான் இன்று நான் இப்படி இருக்கிறேன்'' என்றார். மேலும் தனது அம்மாவை பார்த்து, ‛‛இது எல்லாம் உங்களால் தான் சாத்தியமானது. நீங்கள் இல்லாவிட்டால் இந்த பணிக்கு வந்திருக்க மாட்டேன்'' என்றார்.
ஜஸ்வந்தின் இந்த வார்த்தையை கேட்டு அவரது அம்மா, பயணிகள் நெகிழ்ந்து போயினர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. வீடியோவை பார்க்கும் பலரும் ஜஸ்வந்த் வர்மா மற்றும் அவரது அம்மாவை பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications