ஷீனாவின் தந்தை சித்தார்த் தாஸிடம் மும்பை போலீஸ் விடிய விடிய விசாரணை
மும்பை: ஷீனா போராவின் தந்தை சித்தார்த் தாஸிடம், மும்பை போலீஸார் நேற்று இரவு விடிய விடிய விசாரணை நடத்தினர்.
இந்திராணியின் முதல் கணவர்தான் இந்த சித்தார்த் தாஸ். இவரை விசாரணைக்கு வருமாறு மும்பை, கர் காவல் நிலைய போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். முன்னதாக ஒரு போலீஸ் குழு கொல்கத்தா சென்று சித்தார்த் தாஸை பலத்த பாதுகாப்புடன் மும்பைக்கு அழைத்து வந்தது.

நேற்று இரவு 8 மணயளவில் கர் காவல் நிலையத்திற்கு சித்தார்த் தாஸ் வந்து சேர்ந்தார். அதன் பின்னர் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவருக்கு எதிரே இந்திராணி முகர்ஜியையும் அமர வைத்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை முழுவதும் வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது.
இரவு முழுவதும் நீடித்த விசாரணை இன்று அதிகாலை 3 மணிக்கு முடிவடைந்தது. அவர் அளித்துள்ள வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் என்ன சொன்னார் என்பதை போலீஸார் தெரிவிக்கவில்லை. இதுதொடர்பாக மும்பை போலீஸ் கமிஷனர் ரவி மரியா இன்று செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளார்.
முன்னதாக இந்த வழக்கில் இந்திராணியின் 3வது கணவரான பீட்டர் முகர்ஜியிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது தான் நடத்தி வரும் நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவற்றை விசாரணைக்காக போலீஸாரிடம் காட்டினார் பீட்டர் முகர்ஜி. அவருடன் அவரது ஆடிட்டரும் விசாரணையின்போது உடன் இருந்தார்.
பீட்டர், சித்தார்த் தாஸ் ஆகியோர் விசாரிக்கப்பட்டபோது, மற்ற அறைகளில் 2வது கணவர் சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஷியாம் ராய் ஆகியோரிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இந்திராணி உள்ளிட்ட 3 பேரின் போலீஸ் காவல் நாளையுடன் முடிவதால் இரவு பகலாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications