For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விமானத்தில் ஏற்ற மாட்டேங்கிறாங்க பாஸ்.. புனே டூ டெல்லிக்கு காரிலேயே பயணித்த சிவசேனா 'அடாவடி' எம்.பி

By Veera Kumar
Google Oneindia Tamil News

மும்பை: விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்படுவதை தொடர்ந்து காரிலேயே புனேயிலிருந்து டெல்லிக்கு பயணித்துள்ளார் சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட்.

ஏர் இந்தியா விமானத்தில் கடந்த 23ம் தேதி புனேயில் இருந்து டெல்லி சென்ற போது 'பிசினஸ்' வகுப்பில் இருக்கை கொடுக்கப்படாத ஆத்திரத்தில் டெல்லி விமான நிலையத்தில், ஏர் இந்தியா மேலாளர் சுகுமாரை அடித்து அவரது சட்டையை கிழித்துள்ளார் ரவீந்திர கெய்க்வாட். அவரது கன்னத்தில் 25 முறை செருப்பால் அடித்தார். இதையடுத்து, அவர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

Shiv Sena MP Ravindra Gaikwad travels by car to Delhi

கெய்க்வாட் எம்.பி.க்கு கடும் கண்டனம் தெரிவித்த விமான நிறுவனங்கள் அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் விதமாக விமானத்தில் அனுமதிக்க தடை விதிப்பதாக விமான நிறுவனங்களை உறுப்பினர்களாக கொண்ட 'இந்தியன் ஏர்லைன்ஸ் கூட்டமைப்பு' அறிவிப்பு வெளியிட்டது.

இதனையடுத்து டெல்லியில் இருந்து மும்பைக்கு ரயிலில் பயணம் செய்தார். அப்போது மக்களின் எதிர்ப்பு காரணமாக பயந்து பாதியில் இறங்கினார். இதனையடுத்தும் நாடாளுமன்ற நடவடிக்கையில் கலந்துக் கொள்ள ஏர் இந்தியாவில் டிக்கெட் எடுத்தார். ஆனால் ஏர் இந்தியா அவருடைய டிக்கெட்டை ரத்து செய்தது.

இதனையடுத்து இன்று புனேயில் இருந்து டெல்லிக்கு காரில் புறப்பட்டு சென்றார். இன்று காரில் டெல்லி செல்லும் அவர் நாடாளுமன்ற நடவடிக்கையில் கலந்து கொள்ளமாட்டார் என அவருடைய நெருங்கிய வட்டார தகவல்கள் தெரிவித்து உள்ளன.

English summary
Shiv Sena MP Ravindra Gaikwad, who has been barred by all major domestic airlines for assaulting an Air India duty manager, has chosen to travel by road to Delhi for the ongoing Parliament session.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X