ரோட்டோரத்தில் செய்த அசிங்கம்.. பொதுவெளியில் இப்படியா? வீடியோ வேற எடுத்துருக்காங்களே.. மலைத்த ம.பி
போபால்: மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையோரம் நடைபாதையில் இளம் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மது கொடுத்து இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதை வேடிக்கை பார்த்த மக்கள், அதனை தடுக்காமல் வீடியோ எடுத்த அதிர்ச்சி தகவலும் தற்போது வெளியாகி இருக்கிறது..
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களையும், பெற்றோர்களையும் மிகவும் கவலை கொள்ள செய்துள்ளது,

குறிப்பாக டெல்லி, ஹரியான, ராஜஸ்தான், உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. மத்திய அரசும் மாநில அரசுகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி மருத்துவர்கள் போராட்டத்தில் குறித்தன. மேலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. இந்த நிலையில் இந்த அதிர்ச்சி ஓய்வதற்குள் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையோரம் நடைபாதையில் இளம் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
மது கொடுத்து இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதை வேடிக்கை பார்த்த மக்கள், அதனை தடுக்காமல் வீடியோ எடுத்த அதிர்ச்சி தகவலும் தற்போது வெளியாகி இருக்கிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன் நகரமானது இந்தியாவில் உள்ள ஆன்மீக நகரங்களில் மிகப் பிரபலமானதாக கருதப்படுகிறது. இப்பகுதியில் உள்ள கொய்லா பாதக் பகுதி எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இந்த நிலையில் அந்த நகரில் உள்ள சாலையில் ஓரமாக இருக்கும் நடைபாதையில் தான் இளம் பெண் ஒருவர் பொதுமக்கள் முன்னிலையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
பட்டப் பகலில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு ஆளாக்கப்பட்ட கொடூரத்தை அப்பகுதி மக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்திருக்கின்றனர். மேலும் அது குறித்து யாரும் கேள்வி கூட எழுப்பாததோடு, அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு வேடிக்கை பார்த்து வீடியோ எடுத்தவர்களையும் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இந்த இடத்து காங்கிரஸ் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. முதல்வரின் சொந்த தொகுதியில் பொதுவெளியில் நடந்த குற்றம் தொடர்பாக கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளதோடு, கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி வன்கொடுமை மற்றும் கொலை சம்பவம் தொடர்பாக பாஜக நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அந்த கட்சி ஆளும் மத்திய பிரதேசத்தில் மட்டும் 18 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் பெண்கள் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்படுகிறார்கள்.
முதல்வரின் சொந்த தொகுதியில் பொதுமக்கள் முன்னிலையில் இளம் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மோகன் யாதவ், மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுஜான், பிரதமர் நரேந்திர மோடி ஏன் அமைதியாக இருக்கிறார்கள் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உஜ்ஜைன் நகர காவல் துறை கண்காணிப்பாளரான ஓம் பிரகாஷ் மிஸ்ரா விளக்கம் அளித்து இருக்கிறார். பாதிக்கப்பட்ட இளம் பெண் காவல் நிலையத்திற்கு வந்து தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளித்தார். உடனடியாக பெண் விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டு அவரது புகார் மூத்த அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டதோடு எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. மேலும் பொதுவெளியில் அந்த பெண்ணுக்கு மது ஊற்றி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த லோகேஷ் என்ற இளைஞரை கைது செய்திருக்கிறோம். மேலும் இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட நபர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications