மும்பை: பள்ளிக்கு கட் அடித்த சிறுவன்... தட்டிக் கேட்ட வேலைக்காரப் பெண்ணுக்கு கத்திக் குத்து
மும்பை: பள்ளிக்கு செல்லாததை தட்டிக் கேட்ட வேலைக்காரப் பெண்ணைக் கத்தியால் குத்திய சிறுவனை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பை செம்பூரில் உள்ள சுபாஸ்நகரில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர், மனைவியை பிரிந்து தனது 14 வயது மகனுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் வீட்டு வேலைகளைச் செய்வதற்காக தேஷஸ்வி(35) என்ற பெண் பணியில் உள்ளார்.
வழக்கம் போல, நேற்று முன்தினம் காலை வேலைக்காக வந்த போது வீட்டில் சிறுவன் மட்டும் தனியாக இருந்துள்ளான். எனவே, சிறுவனிடம் ஏன் பள்ளிக்குச் செல்லவில்லை எனக் கேட்டுள்ளார் தேஜஸ்வி.
மேலும் சிறுவன் பள்ளி செல்லாமல் இருப்பதை அவனது தந்தையிடம் கூறப்போவதாக மிரட்டியுள்ளார் தேஜஸ்வி. இதனால் ஆத்திரம் அடைந்த அச்சிறுவன் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து தேஷஸ்வியை சரமாரியாக குத்தியுள்ளான்.
இதில் இடது கை, தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் தேஜஸ்விக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தேஜஸ்வியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தார் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
இதற்கிடையே, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிறுவனைக் கைது செய்து டோங்கிரியில் உள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்துள்ளனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications