ஒரே போட்டோ.. உலுக்கும் பயங்கரம்.. தம்பி "சடலத்தை" மடியில் கிடத்தி.. ஈயை விரட்டிய சிறுவன்.. என்னாச்சு
8 வயது சிறுவன் மடியில் தம்பியின் சடலத்தை வைத்திருக்கும் போட்டோ வைரலாகிறது
போபால்: 8 வயது சிறுவன் சடலத்துடன் உட்கார்ந்திருக்கும் போட்டோ ஒன்று, காண்போரின் நெஞ்சை உலுக்கி எடுத்து வருகிறது.. என்ன நடந்தது?
மத்தியப்பிரதேசம், மொரோனா மாவட்டத்தில் உள்ள அம்பா கிராமத்தை சேர்ந்தவர் பூஜாராம்... இவர் ஒரு கூலித்தொழிலாளி..
இவருக்கு 8 மற்றும் 2 வயதில் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.. பூஜாராமின் 2 வயது மகன் ராஜாவுக்கு உடம்பு சரியில்லை.. கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது.

ராஜா
தற்போது உடல் நிலை மோசமாகிவிட்டது. அதனால், மொரோனா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க, தன்னுடைய கிராமத்தில் இருந்து 30 கி.மீ தூரமுள்ள மருத்துவமனைக்கு பூஜாராம், உடல்நிலை சரியில்லாத ராஜா மற்றும் மூத்த மகனுடன் வந்துள்ளார்... எனினும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவன் ராஜா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.. இதனால் அதிர்ந்து போன பூஜாராம், மகனின் சடலத்தை கட்டிப்பிடித்து கதறி அழுதார்..

1500 ரூபாய்
இதையடுத்து, உடலை எடுத்து செல்ல மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் வழங்க மறுத்ததாக கூறப்படுகிறது. அந்த மருத்துவமனை வளாகத்தில் வெளியே ஆம்புலன்ஸ்கள் நின்றிருந்தன.. ஆனால், சடலத்தை கொண்டு செல்ல 1500 ரூபாய் கேட்டுள்ளனர்.. அவ்வளவு பணம் தன்னிடம் இல்லாததால், வேறு இடத்தில் சென்று ஆம்புலன்ஸ் தேட முடிவு செய்தார் பூஜாராம்....

ஆம்புலன்ஸ்
வேறு வாகனம் தேடி வருவதாக தன்னுடைய மூத்த மகனிடம் சொல்லி, உயிரிழந்த 2வது மகனின் சடலத்தையும் அங்குள்ள ஒரு பூங்காவிற்கு அருகே வைத்து விட்டு சென்றார்... 8 வயது சிறுவனும், தன்னுடைய 2 வயது தம்பியின் சடலத்துடன் அரைமணி நேரமாக சாலையில் காத்திருந்தான்... தம்பியின் இறந்த உடலை மடியில் கிடத்தி கொண்டு, சிறுவன் தாரை தாரையாக கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்ததை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ந்து போனார்கள்..

கண்ணீர்
உடனடியாக போலீசுக்கு விஷயத்தை சொன்னார்கள்.. தகவல் அறிந்து வந்த போலீசார், சிறுவனின் உடலை, மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தம்பியின் சடலத்தை சுற்றும் ஈக்களை விரட்டி விட்டு, கண்ணீருடன் இருக்கும் அந்த சிறுவனின் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.. இது காண்போரின் இதயத்தை நொறுக்கிகொண்டிருக்கிறது.. இறந்த தம்பியின் உடலை மடியில் சுமந்து சாலையோரமாக உட்கார்ந்திருந்த சிறுவனை, பத்திரிக்கையாளர் சிலர் போட்டோ எடுத்துள்ளதாக தெரிகிறது..

ஆம்புலன்ஸ்
அந்த போட்டோவும் போலீசாரின் கவனத்துக்கு சென்றுள்ளது. அதற்கு பிறகுதான் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கு பிறகு, மாவட்ட மருத்துவமனைக்கு சென்று அங்கிருந்த அதிகாரிகளை போலீசார் எச்சரித்துள்ளனர்.. இதையடுத்து பூஜாராமுக்கு ஆம்புலன்ஸ் மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டுள்ளது... அதற்கு பிறகு, ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு எடுத்து செல்ல ஏற்பாடு செய்து கொடுத்தனர். தம்பி உடலில் மொய்த்த ஈக்களை விரட்டிக் கொண்டு, கண்ணீருடன் காணப்பட்ட சிறுவன் படத்தை பார்த்து ஏராளமானோர் அனுதாபம் தெரிவித்து வருகின்றனர்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications