"ஒரே நொடி.." ஸ்லிப் ஆன மாணவர்.. ஆறாவது மாடியில் இருந்து விழுந்தார்! பறிபோன உயிர்! ஷாக் வீடியோ
எதிர்பாராத விதமாக 6ஆவது மாடியில் இருந்து விழுந்த நபர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா: நண்பர்களுடன் ஜாலியாக பேசிக் கொண்டிருந்த மாணவர் ஒருவர் எதிர்பார்க்காத விதமாக ஆறாவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த ஷாக் வீடியோ இப்போது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
ஒருவருக்கு மரணம் எப்போது எப்படி வரும் என்றே தெரியாது.. நன்கு பேசிக் கொண்டி இருக்கும் நபர் கூட நொடிகளில் உயிரிழந்துவிடுவார். அது விபத்தாக இருக்கலாம்.. அல்லது உடல்நிலை பிரச்சினையாக இருக்கலாம்.
நொடிகளில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஏற்படும் மரணங்கள் நம்மைச் சுற்றியிருப்போரை பெருந்துயரத்தில் ஆழ்த்திவிடும். அப்படியொரு சம்பத்தின் ஷாக் வீடியோ தான் இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது.

ஆறாவது மாடி
நாம் எங்கு இருந்தாலும் அலட்சியமாக இருக்கக் கூடாது. நன்கு பழக்கப்பட்ட இடம் என்றாலும் கூட சில சமயங்களில் எதிர்பார்க்காத சம்பவம் நடந்துவிடும். அப்படித்தான் ஆறாவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார் இந்த இளைஞர்.. மேற்கு வங்க மாநிலம் கோட்டா என்ற பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அந்த 20 வயது இளைஞர் கண்ணிமைக்கும் நேரத்தில் உயிரிழந்தார்.

இளைஞர் பலி
அங்குள்ள ஜவஹர் நகர் பகுதியில் இருக்கும் விடுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அந்த விடுதி கட்டிடத்தின் ஆறாவது மாடியில் இருந்து அந்த இளைஞன் தவறி விழுந்து உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். உயிரிழந்த அந்த இளைஞர் இஷான்ஷு பட்டாச்சார்யா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்ன நடந்தது
அந்த நபர் 6ஆவது மாடியில் பால்கனி போன்ற இடத்தில் தனது நண்பர்களுடன் இணைந்து பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கிருந்த அலுமினியம் தடுப்பில் அவர் உட்கார்ந்து சாய்ந்துள்ளார். அந்த அலுமினியம் தடுப்பு அவரது எடையைத் தாங்க முடியாமல் உடைந்ததாகத் தெரிகிறது. இதனால் அப்படியே அவர் ஆறாவது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார், விழுந்த உடன் சம்பவ இடத்திலேயே அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார்
உயிரிழந்த இஷான்ஷு மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள துப்குரி பகுதியைச் சேர்ந்தவர்.. அவர் நீட் தேர்வில் பயிற்சி பெறுவதாகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோட்டாவுக்கு வந்துள்ளார். இங்குள்ள தனியார் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து அவர் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்துள்ளார். அப்போது கட்டிடத்தின் ஆறாவது மாடியில் உள்ள பால்கனியில் அவர் தனது விடுதி நண்பர்கள் மூவருடன் பேசிக் கொண்டிருந்ததாக விசாரணை அதிகாரி தெரிவித்தார்.
|
மகாராஷ்டிரா
அப்போது அறைக்குத் திரும்ப அனைவரும் முடிவு செய்து கிளம்பிய போது இந்த மோசமான சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.. முன்னதாக கடந்த ஜனவரி 29ஆம் தேதி இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்தது. மகாராஷ்டிராவில் நுழைவுத் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்த 17 வயது மாணவர் இதேபோல விடுதி கட்டிடத்தின் முதல் மாடியில் உள்ள பால்கனியில் இருந்து விழுந்து பலத்த காயம் அடைந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications